தமிழ்ஹிந்து இணையதளத்தில் ஆலந்தூர் மள்ளன் என்ற புனைபெயரில் அரவிந்தன் நீலகண்டன் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது நினைவிருக்கும். அந்தக் கதைகள் வாசகர்களால் தொடர்ந்து விவாதிக்கப் பட்டு, பாரட்டவும் பட்டன. அவற்றை மிக நேர்த்தியாகத் தொகுத்து தடம் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது…. பிரசார சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களை அனாயசமாக தொட்டுப் பார்க்கும் சிறுகதைகளின் தொகுப்பு இது. அத்தகைய கதைகளின் வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி, வரலாற்றுப் பின்னணியில் இந்திய உணர்வுடன் வெளிவரும் சிறுகதைகளை இத்தொகுப்பில் நாம் விழிவிரிய வாசிக்கலாம். பாரதப் பண்பாட்டில் வேர்கொண்டு நம் மரபின் மகத்துவக்கொடியைப் பறக்கவிடும் கதைகள் இவை…
View More ஹிந்துத்துவ சிறுகதைகள்Author: ஆசிரியர் குழு
அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்
மதிப்பிற்குரிய பெரியவர் வெங்கட் சாமிநாதன் அடுத்தடுத்த இரண்டு மாரடைப்புகளால் நேற்று (21 அக்டோபர் 2015) அதிகாலை பெங்களூரில் காலமானார். கலைமகளின் தவப்புதல்வர் புனிதமான சரஸ்வதி பூஜை நாளன்று மறைந்து விட்டார். கலை இலக்கிய விமர்சன பிதாகமர், மகத்தான சிந்தனையாளர். அரை நூற்றாண்டு காலம் தனது கூர்மையான எழுத்துக்களாலும் இடித்துரைகளாலும் தொடர்ந்து புதிய திறப்புகளை தமிழர்களாகிய நமக்கு அளித்து வந்து வழிகாட்டியவர் மறைந்து விட்டார்…. தமிழ்ஹிந்து இணையதளம் உருவான 2008ம் ஆண்டு முதல், தொடர்ந்து வெ.சா அவர்களின் படைப்புகள் இதில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதியது இன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் என்ற கட்டுரை தான். அதன் முதல் பகுதி தமிழ்ஹிந்துவில் சென்ற வாரம் வெளிவந்தது. அதன் அடுத்தடுத்த பகுதிகளை ஏற்கனவே அவர் அனுப்பி வைத்திருந்தார்…
View More அஞ்சலி: வெங்கட் சாமிநாதன்அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி
1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்… 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது…
View More அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதிவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்
கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன… இந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது…
View More விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்
இந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே..
View More நேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”
தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம். தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. அந்தப் பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்? உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது…. தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்…
View More ‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி
பாரத அன்னையின் பாதங்களில் 8-8-1993 அன்று தம் இன்னுயிர்களை பலிதானமாக்கிய எம் இந்துத்துவ…
View More சென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலிஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா
இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய…
View More ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழாமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு
சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க.…
View More மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடுசென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14
சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14…
View More சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14