கடுமையான விமர்சனங்களை அவர் மீது கொண்டிருந்தாலும் கூட அவரது மறைவை ஓரளவு எதிர்பார்த்திருந்தாலும் கூட சொல்ல முடியாத ஒரு வேதனை ஏற்படுகிறது… 20-21ம் நூற்றாண்டுகளின் யுகசந்தியில் தமிழ்நாட்டை சுயலாப மக்கள் விரோத சுரண்டல்வாதிகளும், துவேஷம் வளர்க்கும் இனவாத அரசியல் கயவர்களும் சீரழித்து விடாமல் காத்த தேவதை ஜெயலலிதா… கறாரான அரசியல்வாதி, பாதரசம் போன்று நிலையின்றி அலைபாயும் ஆளுமை (mercurial personality), இரும்பை ஒத்த உறுதி, மிகவும் சிக்கலான நிர்வாகத்தையும் கையாளும் செயல்திறன் – இத்தகைய பிரமிப்பூட்டும் பண்புகளின் கலவையாக ஜெயலலிதா விளங்கினார்….
View More அஞ்சலி: தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஜெ.ஜெயலலிதாAuthor: ஆசிரியர் குழு
வலம்: புதிய மாத இதழ்
இந்த வருட விஜயதசமி (அக்-11) அன்று முதல் இதழ் வெளிவருகிறது. வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும். இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா. 80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும். இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன், டிடி/செக் அல்லது வங்கிக்கணக்கு மூலம் இதழுக்கான சந்தாவை செலுத்தலாம்…
View More வலம்: புதிய மாத இதழ்கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்
மாளவியா ஒரு மண்ணுருண்டை, திலகர் ஒரு கொலைகாரர், வீர சாவர்க்கர் ஒரு கோழை, பிரிட்டிஷார் வரவில்லை என்றால் நமக்குக் கல்வி அறிவே இருந்திருக்காது – தமிழ்நாட்டில் இப்படி ஒரு இந்துத்துவ எதிர்ப்பு பிரசாரம் நடந்து வருகிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது எப்போதுமே பாரதத்தின் தேசத் தலைவர்களையும், அதன் மகத்தான பண்பாட்டுக் கூறுகளையும் கொச்சைப்படுத்துவதில், இழிவுபடுத்துவதில் தான் முடிகிறது. ஆனால் உண்மை என்ன? இந்துத்துவத்தின் வரலாற்றுப் பார்வையை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய சொந்தப் பாரம்பரியம். பொய்யிலிருந்து மெய்மைக்கு அழைத்துச் செல்லும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், இன்றைய அறிவுச்சூழலில் ஒரு கட்டாயத் தேவை… அறிவுஜீவிகள் கூறுவதுபோல இந்துத்துவம் என்பது இந்து ஞான மரபுடன் தொடர்பு இல்லாத வெறும் அரசியல் சித்தாந்தம் அல்ல. இந்துத்துவத்தின் வரலாறு என்பது வீர சாவர்க்கருடன் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பின் இயக்க வரலாறு என்பதாக மட்டும் இல்லை. அதன் தொடக்க வேர்கள் புராதனமானவை. பாரதத்தின் உன்னதங்களைக் கொண்டாடிப் பாதுகாப்பவை. அவற்றைத் தகவமைத்து வளர்த்தெடுப்பவை. அதுபோலவே பாரதத்தின் சீர்கேடுகளுக்கு ‘பார்ப்பனீயம்’ போன்ற பொய்யான எதிரிகளை உருவாக்காமல் பொறுப்பேற்பவை. அந்த சமூக தேக்கநிலைகளிலிருந்து விடுதலையாகும் உத்வேகத்துடன், இந்துத்துவம் அதற்கான தீர்வுகளைப் பாரத மண்ணிலிருந்து உருவாக்குகிறது….
View More கொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்
1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். காந்தியவாதியும் வரலாற்றாசிரியருமான தரம்பால், பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆதாரபூர்வமான நூலை எழுதினார். மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை B.R.மகாதேவன் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அளித்திருக்கிறார்..
View More அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்
தமிழில் இப்படி ஒரு நூல் வந்திருப்பது நம் நல்லூழ். இன்றைய அறிவியலுக்கும் பாரத மெய்ஞானச் சிந்தனை முறைகளுக்கும் என்ன தொடர்பு? அறிவியல் கண்டுபிடிப்புகளை நம் பாரம்பரியமான சிந்தனை மரபுகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என்னும் கேள்வியுள்ள தேடல் கொண்டவர்களுக்கு வீணான பெருமித மார்தட்டல்களின்றி, மிகக் கறாராக நவீன விஞ்ஞானத்தின் பாய்ச்சலை, பாரதத்தின் மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் விளக்கும் சிறந்த நூல். இந்நூலுக்காக அரவிந்தன் நீலகண்டனுக்கும் சாந்தினிதேவி ராமசாமிக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். பாரதம் அளித்த தரிசனங்களிலும் நவீன அறிவியலிலும் ஈடுபாடுள்ளவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாகத் தவறவிடக் கூடாது….
View More இந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்
ஸ்ரீராமானுஜர் மற்றும் வைணவ ஆசாரியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் முன்வைத்து சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் ஆமருவி தேவநாதன் அவர்கள் எழுதியுள்ள குறுநாவல் ‘நான் இராமானுசன்’…. “ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.. பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது இந்த நூல் துலங்கி நிற்கிறது. ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, நூல் உருக் கொண்ட கதை இதுவே…. ”
View More ‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்
ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது. ஒரு பயணக் கட்டுரை போலவும் இல்லாமல், ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல், இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையைப் பற்றி இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான். இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே. ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஈராக்கின் இந்தப் பக்கத்தோடு, அதன் வளமை, ஈராக்கியர்களின் அன்பு, இந்தியர்கள் மீதான மரியாதை என்ற இன்னொரு பக்கத்தையும் இப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்….
View More ஈராக் நேற்றும் இன்றும் : புத்தக அறிமுகம்காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்
கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன….
View More காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்
பிரிட்டிஷாருக்கு முந்தைய பாரதத்தில் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பங்கள், சமூக அமைப்புகள், சமூக ஒழுங்குகள், தத்துவங்கள் என பாரதத்தின் கடந்த காலத்தை மாறுபட்ட கோணத்தில் அலசி ஆராய்கிறது B.R.மகாதேவன் எழுதியுள்ள இந்த நூல். நூலின் முதல் பாதி காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பாலின் நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் பாதி இந்திய சாதிய சமூகம் குறித்து இதுவரை பேசப்படாத விஷயங்களை புதிய கோணத்தில் அறிமுகம் செய்துவைக்கிறது….
View More மறைக்கப்பட்ட பாரதம்: புத்தக அறிமுகம்கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
திருவள்ளுவர் – சுவாமி விவேகானந்தர்- இருவருமே மனிதப் பிறவியின் மாண்பை உணர்த்தியிருக்கிறார்கள். தன்னம்பிக்கையின் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளார்கள். சோம்பலைத் தூற்றியிருக்கிறார்கள்.முயற்சியின் மேன்மையைப் போற்றியிருக்கிறார்கள். ஒழுக்கத்தின் பெருமையை உணரச் Thiruvalluvar 1செய்திருக்கிறார்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியைப் பற்றிய கருத்துக்களை அழகாக வடித்திருக்கிறார்கள்.
View More கல்வி – வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்