தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..
View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசுTag: அகழாய்வு சாட்சியங்கள்
அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2
பஞ்சாயத்துத் தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, தெய்வ நம்பிக்கை, மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டு நலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிகச் சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்சினைகளைத் தீர்த்தது… ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது…
View More அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2