இந்த நெருக்கடி திடீரென்று உருவானதல்ல. ஆட்சிபீடத்தில் அமர்ந்த ராஜபக்சே சகோதர்களின் அரசு அந்த நாட்டின் பொருளாதாரத்தையும், நல்வாழ்வையும் நாசமாக்குவதற்கு என்னவெல்லாம் குளறுபடிகள் சாத்தியமோ எல்லாவற்றையும் “ரூம் போட்டு யோசித்து” செய்வது போல ஒவ்வொன்றாக செய்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவிலிருந்து விலகி விலகி, பகாசுர சீனாவின் ராட்சச டிராகன் கரங்களில் தனது நாட்டின் துறைமுகம், கட்டமைப்புகள், வளங்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையும் அடகுவைத்து விட்டு இப்போது இலங்கை முழி பிதுங்கி நிற்கிறது.. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களான நமக்கு இதிலிருந்து கிடைக்கும் பாடங்கள் முக்கியமானவை…
View More இலங்கையின் பொருளாதார நெருக்கடி: ஒரு பார்வை