வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?… அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?….
View More உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2Tag: உதயகுமாரன்
கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22
அறவண அடிகள் உனக்குப் பல தர்ம சிந்தனைகளைக் கூறுவார். தவத்தையும் தருமைத்தையும் சார்ந்து தோன்றும் பனிரெண்டு நிதானங்களைப் பற்றியும், பிறவியறுக்கும் தருமம்பற்றியும் தனக்கே உரியவகையில் கூறுவார். உலகமக்களின் பாவம் என்னும் இருள் அகல ஞாயிறுபோலத் தோன்றிய புத்தன் கூறிய அறநெறிகளைப் பாதுகாக்க வேண்டி பல பிறவிகள் எடுத்து இந்த நகரத்திலேயே தங்கியிருப்பேன். அவர் உன்னையும் உன் தாய் மாதவியையும் அவருடன் தங்கியிருக்கக் கோருவார். உங்களைப் பல்லாண்டு தவறின்றி வாழ வாழ்த்துவார். உன்னுடைய மனப்பாலான துறவறம் பூண்டு அறநெறி கற்கவேண்டும் என்பது நிறைவேற வாழ்த்துவார்
View More கந்திற்பாவை வருவதுரைத்த காதை — மணிமேகலை 22உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21
தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.
சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20
பசி இருக்கும் வரையில்தான் குற்றங்கள் இருக்கும். குற்றங்கள் அதிகரிக்கும்போதுதான் சிறைக்கோட்டங்கள் தேவைப்படும். அந்தப் பசியைப் போக்கிவிட்டு, குற்றங்களைக் குறைத்துவிட்டால், பிறகு சிறைக்கோட்டத்திற்குத் தேவை என்ன இருக்கப்போகிறது, மன்னா? எனவே இப்போதுள்ள இந்தப் பெரிய சிறைக்கோட்டத்தை இடித்துத் தள்ளிவிட்டு, ஒரு மிகப்பெரிய அறக்கோட்டத்தைக் கட்டுங்கள்!
View More சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை – மணிமேகலை 20உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19
மணிமேகலை யாரு? மாதவி என்ற பேரிளங்கொடிக்குப் பிறந்த துவண்டுவிழும் கொடி. பூத்துக்குலுங்கும் மலர். போதவிழ்ந்து தேன்சிந்தும் மலர். மலரில் தேன் வடிகிறதென்றால் வண்டு மொய்க்காதா என்ன? மணிமேகலையைச் சாதாரண வண்டா மொய்த்தது? உலகாளும் அரசவண்டு. நான் பார்த்துக்கொண்டு வாளாதிருப்பேனா? அந்த வண்டு தேன்பருகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அமுதசுரபியாம் அமுதசுரபி! பிச்சைப் பாத்திரம்! அந்தத் திருவோட்டை மணிமேகலை கைகளிலிருந்து பிடுங்கி அந்தப் பிச்சைக்கரகள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அவளை என்னுடன் பொன்தேரில் ஏற்றிக்கொண்டு வருகிறேனா இல்லையா, பார்!
View More உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]
எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]
“என்னவெல்லாம் கூறியிருப்பான்? கற்பில்லாதவள், தூய தவமற்றவள், வருணக்காப்பு இல்லாதவள், விலைமகள் என்று என்னவெல்லாம் கேவலப்படுத்தியிருப்பானா? இவனது பழிச்சொற்கள் எதையுமே பொருட்படுத்தாமல், என் மனம் ஏன் இவன்பால் செல்கிறது? இதுதான் காமத்தின் இயல்பா? நான் துறவறக் கோலம் பூண்டுள்ளது எல்லாம் வேடம்தானா? இதுதான் உண்மையென்றால், என்னுடைய நேர்மை அழியட்டும்!“
View More மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை – [மணிமேகலை – 6]பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]
இன்று பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனை அறிமுகம்செய்யும்போது அவனுடைய வீரபிரதாபத்துடன் அறிமுகப்படுத்துவதுபோல, உதயகுமாரனை ஒரு யானையை அடக்கும் நிகழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறார். அதேபோல் தாமரைமீது துள்ளிய கயல்மீன் மீன்கொத்திப் பறவையிடம் சிக்காமல் தப்பியதைக் கூறுவதன்மூலம் மணிமேகலை உதயகுமாரன் கைகளுக்குச் சிக்காமல் தப்பிக்கப் போவதை குறிப்பால் உணர்த்துகிறார்.
View More பளிக்கறை புக்க காதை – [மணிமேகலை – 5]