மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!

View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21

தன் மனைவியின் வடிவத்திலிருந்த மணிமேகலை உதயகுமாரனுடன் பேசிக்கொண்டிருப்பதை விஞ்சையன் பார்த்தான். தன் மனைவி தன்னைப் பார்த்தும் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அயலான் ஒருவனுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அசூயைகொண்டான்.
அவனோ அரசகுமாரன். இவளோ முத்துப்பல் மின்ன யௌவனம் காட்டும் இளமங்கை. அதனால்தான் அவள் தனது யானைத்தீ பசிப்பிணி மறைந்தபின்னும் வித்யாதர உலகிற்குத் திரும்பாமல் இந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறாள் போலும்! விஞ்சையனின் கோபமானது அக்னிக் கொழுந்தினைப்போலத் தழைத்து எரியத்தொடங்கியது.

View More உதயகுமாரனை வாளால் எறிந்த காதை — மணிமேகலை – 21

பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

கப்பல் நங்கூரம் இடப்பட்ட இடத்திற்குத் தாமதமாக வந்த ஆபுத்திரன் கப்பல் கிளம்பிப் போய்விட்டதை அறிந்ததும் திடுக்கிட்டுப் போனான். மனம் நொந்து அலையத் தொடங்கினான். ‘யாருமற்ற தீவினில் இந்த அட்சய பாத்திரத்தினால் என்ன பயன்? வெறுமே என் பசியைப் போக்கவா?’ என்று சிந்தித்தவாறே அங்கிருந்த நீர் நிறைந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான்

View More பாத்திர  மரபு கூறிய காதை – மணிமேகலை 15

பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

என்னுடைய தேசத்தில் நல்லறங்கள்செய்வதால் வளமையான வாழ்வினைப்பெற்று மாடமாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்கள் நிறைய உள்ளனர். அந்தச் செல்வந்தர்களின் இல்லங்களின்முன் நின்று நைந்துபோன கந்தல் ஆடைகளை அணிந்து, மழை வெயில் பாராமல் நிற்கவும் முடியாமல் பிச்சைகேட்டு அழைக்கவும் நாணப்பட்டுப் பசியில்வாடும் வறியவர்கள் பலர் உள்ளனர். பெற்ற குழந்தை பசியால் வாடியவுடன் ஈன்ற தாயின் முலைக்காம்புகள் தானே சுரப்பதுபோல, வறியவர்களின் பசிப்பிணியைக் கண்டு இந்த அட்சய பாத்திரமானது தானே உணவு சுரக்கச்செய்யும் திறனை நேரில் காண விழைகிறேன்.

View More பாத்திரம்பெற்ற காதை – மணிமேகலை 12

பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

ஏன் மணிமேகலை என்ற கேள்வி எழலாம். மணிமேகலை ஒன்றுதான் அது வாழ்ந்த காலத்தில் அன்றாட வாழ்க்கைமுறை எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்த காவியம். குறிப்பாகப் பெண்களின் நிலையையும், பெண்களை வெறும் உடலாகவே பார்க்கும் ஆடவர்களின் தன்மையையும் அறச்சீற்றத்தோடு எடுத்துச் சொல்கிறது. இது புத்த மதத்தின் சிறப்பைச் சொல்லவந்த காவியம்.. பண்டித மொழியிலும் இல்லாமல், கொச்சையாகவும் இல்லாமல் –ஆங்கிலத்தில் readability என்பார்கள்-அப்படியொரு வாசிப்புத் தன்மையான நடையில் மணிமேகலையை எழுதலாம் என்று இருக்கிறேன். கதைப் போக்கில் தடங்கல் இருக்காது எனினும் சில மௌன இடைவெளிகளில் என்னுடைய கருத்துக்களைச் சேர்த்து கதை சொல்லப்போகிறேன்… அகத்தியர் என்ற முனிவரின் மேற்பார்வையில் காவிரி தமிழ் நிலத்தில் பாயும் செய்தி சொல்லப்படுகிறது. சம்பாபதி என்ற பெண்தெய்வம் காவிரியைவிட வயதில் மூத்தவள் என்ற தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பாபதி என்ற தெய்வம் மேருமலையை விடுத்து தென்திசைப் புலம் பெயர்ந்த குறிப்பும் உள்ளது. இதன் காரணமோ, பின்னணியோ கூறப்படவில்லை…..

View More பாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)

மணிமேகலையின் ஜாவா – 1

மணிமேகலை காப்பியத்தில் ஒரு முக்கியமான கட்டம் சாவகம் எனும் ஜாவாவில் நிகழ்கிறது. நாகபுரத்தின் அருகே சோலை ஒன்றில் வந்திறங்கி அங்கே தருமசாவகன் என்ற முனிவருடன் மணிமேகலை தங்கியிருக்க அங்கு வந்து அவளைச் சந்திக்கிறான் ஆபுத்திரன்… சாவகத்தீவில் வரும் முக்கியப்பாத்திரங்களைப் பற்றிய பெயர் முதலான குறிப்புகளோ, இடங்களோ நிச்சயம் ஜாவாவின் மேற்குப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்ல, தேடலைத் தொடங்கினேன். நான் அங்கேயே மேற்குஜாவாவில் வசிக்க நேர்ந்ததும் என் நல்லூழ்…ஆபுத்ரா என்ற பெயரை மேற்குஜாவாவின் சுந்தானிய இன (Sundanese) மக்கள் அவன் கதையை மறந்து விட்டாலும் இன்றும் பரவலாய் வைத்துக் கொள்கின்றனர்…

View More மணிமேகலையின் ஜாவா – 1

அள்ளக் குறையாத அமுதம் – 1

மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?

View More அள்ளக் குறையாத அமுதம் – 1