திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…
View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே