திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூல் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது…
View More திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களேAuthor: தமிழ்செல்வன்
தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்
காஞ்சி மடத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்து வருகின்றது. அரசாணையின்படி, ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் செய்தது தவறே அல்ல. அவரும் அவர்களுடைய தர்மப்படியும் மரபின்படியும், கடவுள் வாழ்த்து பாடப்படும்போது, அமர்ந்த நிலையில் தியானம் செய்துள்ளார். இதில் வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்பு கேட்கவோ அவசியமே இல்லை.. 1971ல் தமிழ்த்தாயைக் கொச்சைப் படுத்தியும், அருவருக்கத்தக்க விதத்தில் அவமானப்படுத்தியும், “மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் தமிழ்த்தாய் உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?” என்று கேள்வி கேட்டு ஈ.வெ.ரா பேசிய உரை பதிவுசெய்யப் பட்டுள்ளது. சீமான் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொளுத்துவோம் என்று பேசியுள்ளார்… ஆண்டாளுக்கான போராட்டத்தை வெறும் பிராம்மணர்களின் போராட்டமாகக் காட்டவும் பிராம்மண – அப்பிராம்மண, சைவ – வைணவ சண்டையாகவும், மாற்றவும் முயற்சி செய்தனர். அவை பெரும் தோல்வி அடைந்தன. அந்த நிலையில், இந்தத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகக் கருதி மக்களைத் திசைத் திருப்ப முயற்சி செய்கின்றனர்….
View More தமிழ்த்தாய் வாழ்த்தும் திராவிட இனவெறியும்ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?
“இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார் ஜெ.பி… நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்.”…
View More ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?
ராமரை அவமதித்த கலைஞர் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு நகைமுரண்! …. இந்தப் பகுத்தறிவுவாதிக்கு ராமரும் விநாயகரும் நம்பகத்தன்மை இல்லாத கட்டுக் கதைகளில் வரும் கற்பனைப் பாத்திரங்கள். ராமர் பாலமும் கற்பனை. ராமாயணமும் கற்பனை தான். ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் தொடர்பான சாபம் மட்டும் கற்பனையல்ல, உண்மையென நம்பத்தகுந்தது! மூடநம்பிக்கையை முறியடிக்க முன்வாயிலில் நுழைவாரா முதல்வர்?
View More ‘பகுத்தறிவுவாதி’ ‘மூடநம்பிக்கை’யை முறியடிப்பாரா?கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பெரும்பாலும் கிறுத்துவ நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவ நாடுகளிடமிருந்து நிதி பெறும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களால் நடத்தப்படும் நிறுவனங்களாகவோ, அல்லது, கிறுத்துவர்களும் இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் செக்யூலரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் மௌடீக ஹிந்துக்களும் அதிக அளவில் வேலைபார்க்கும் நிறுவனங்களாகவோ இருக்கின்றன. எனவே அவை அனைத்தும், இந்த தேசத்தின் ஹிந்துத் தன்மையை முழுவதுமாக அழித்து, கிறுத்துவ கலாசாரத்தை இந்நாட்டில் நுழைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.
View More கிறுத்துவப் ‘பொதிகை’ பொழியும் மதப் பிரசாரம்!தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?
தாலி பற்றிய நிகழ்ச்சியால் ஏற்பட்ட பின்னடைவினாலோ அல்லது ஹிந்துக்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தினாலோ, விஜய் டிவி நிறுவனம், “முஸ்லிம் பெண்கள் பர்தா உடை அணிவது அவசியமா?” என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியும் (17-01-10) விளம்பரப்படுத்தப்பட்டது. அதை உஷாராய் கவனித்த ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’, மாநகரக் காவல்துறை ஆணையருக்கும், விஜய் டிவி நிறுவனத்திற்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியது.
View More தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்
தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.
View More ‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்
நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
View More ஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்
தலைவர்களின் பிறந்த நாட்கள் விழாக்களின் போது குறிப்பிட்ட எண்ணிக்கை அளவில் ஜோடிகள் “ஏற்பாடு” செய்யப்பட்டு – பாதிபேர் ஏற்கனவே திருமணம் செய்தவர்களாக இருப்பார்கள், மீதிப்பேர் கிடைக்கிற சன்மானத்திற்காக, குழந்தை குட்டிகளை வீட்டில்விட்டுவிட்டு, ‘நடிக்க’ முன்வந்திருப்பார்கள் – அவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் நடக்கும்.
View More திராவிட மாயையில் ‘சுயமரியாதை’ இழந்த திருமணங்கள்சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்
”சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது.. சென்னை, திருவான்மியூர் அட்வெண்ட் சர்ச் வாசலில் ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகாலஷேபம்” என்று விளம்பரம் …
View More சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்