மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்

தமிழகத்தில், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன. இதன் மூலமாக, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆகிறது

View More மருத்துவக் கல்வியில் புலிப் பாய்ச்சல்

நாடும் நமதே! நாற்பதும் நமதே!

தமிழக தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான நிலை நிலவுகிறது. வெல்ல வேண்டிய அணியும், வெல்ல வாய்ப்பு அதிகமுள்ள அணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகவே இருப்பது மகிழ்ச்சியே. எனினும், வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை பெருமளவில் மாற்றிக் காட்டுவதே, கடந்த ஐந்தாண்டு கால பாஜக ஆட்சிக்கு தமிழகம் அளிக்கும் நன்றிக்கடனாக இருக்கும்.

View More நாடும் நமதே! நாற்பதும் நமதே!

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.

View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்

1999-இல் அதிமுகவாலும், 2004-இல் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்டவர் வாஜ்பாய். அதனை மறக்க முடியவில்லை. அதனால்தானோ, இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத வலிமையுடன் கூட்டணிக் கட்சிகளைச் சாராமல் செயல்படும் வகையில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்… இன்று பாஜகவுடன் நெருக்கம் காட்ட அனைத்துக் கட்சிகளும் திரைமறைவு பேரம் நடத்துகின்றன. மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் கதிகலங்கியுள்ள பல கட்சிகள் பாஜகவுடன் தோழமை பூண்டு தப்பிக்க விழைகின்றன. இந்த நேரத்தில்தான் பாஜக சாதுரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும். தனது முதுகில் குத்திய கட்சிகளை பாஜக மன்னிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.
அடல் பிகாரி வாஜ்பாய் என்ற இமயம் தேசிய அரசியலிலிருந்து விலகக் காரணமான நாசகார சக்திகளுடன் எந்த இணக்கமும் பாஜக வைத்துக் கொள்ளக் கூடாது என்பதே, சரித்திர நினைவு உள்ளவர்களின் கருத்து…

View More பாஜகவும் கூட்டணிகளும்: அடல்ஜியின் அனுபவம் வழிகாட்டட்டும்

சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…

அதிமுகவின் தலைமைப் பொறுப்பு இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. சசிகலா பொதுசெயலாளர் ஆவாரா? முதல்வர் பதவியையும் கைப்பற்றுவாரா? நிர்பந்தங்களால் அரசியலிலிருந்தே ஒதுங்குவாரா? எல்லாம் காலத்தின் கரங்களில் இருக்கிறது. எது நடந்தாலும், அது தமிழகத்தின் அரசியலில் அழிக்க முடியாத கறையாகவே இருக்கும்.

காமராஜரும், ராஜாஜியும், சத்தியமூர்த்தியும், முத்துராமலிங்கத் தேவரும், திரு.வி.க.வும், பாரதியும், வ.உ.சி.யும், தன்னலமின்றி அரசியல் நடத்திய மண்ணில், சுயநலத்துக்காக அதிமுகவினர் எந்த அரசியல் பின்புலமும் அற்ற ஒருவரிடம் கையேந்துவதே நமது தர வீழ்ச்சியின் அடையாளம்.

View More சின்னம்மாவும், நமது அரசியல் சிறுமையும்…