கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2

தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…

View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2

கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தரவர்க்க மக்களும், குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது… அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட பொழுதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர்…

View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்… அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன…

View More காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் அதிமுக அரசு இந்நேரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவர். இப்போதே, ‘மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதையடுத்து தமிழகத்தில் செயல்படாத அதிமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்’ என்று திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே, அதிமுகவுக்கு ராஜதந்திரத்துடன் யோசிக்க வேண்டிய தருணம் இது.

View More அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா?