உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…
View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்Tag: கண்ணகி
வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27
“மணிமேகலா! இது தொன்மையான ஊர். பல்வேறு சமய அறிஞர்கள் நிறைய இருப்பார்கள். உன்னை வாதத்திற்கு அழைப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, நீ சார்ந்த புத்த சமய வாதங்களில் உள்ள மெய்ப்பொருளை நிறுவி, அவர்கள் சொன்ன எவற்றிலும் மெய்ப்பொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்து. உனக்கு வெற்றி உண்டாகட்டும்.”
View More வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]
எனக்கு நீ ஒரு உதவி செய்யவேண்டும். நேற்றிலிருந்து உன்னையும் மணிமேகலையையும் காணாது மாதவி அங்கே வருந்திக்கொண்டிருக்கிறாள். நீ அவளிடம் சென்று, மணிமேகலை என்னுடைய பாதுகாப்பில் மணிபல்லவத் தீவில் இருக்கும் சேதியைக் கூறு. அவளுக்கு ஏற்கனவே என்னைப்பற்றித் தெரியும். இந்தப் புகார்நகரின்கண் மணிமேகலா என்ற பெண் தெய்வம் உலாவுந்தது என்பதை அறிந்த கோவலன் என்னைப்பற்றி மாதவியிடம் கூறியிருக்கிறான். இதன் பொருட்டே இருவரும் தங்கள் புதல்விக்கு என் பெயரைச் சூட்டியுள்ளனர்.
View More துயில் எழுப்பிய காதை – [மணிமேகலை -8]ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]
வேந்தன்முன்பு ஆடப்படும் வேத்தியல் கூத்தும், பொதுமக்கள்முன்பு ஆடும் பொதுக்கூத்தும் நன்குகற்றவள் நீ. இசையும், எழுவகைத் தூக்குகளும், தாளக்கட்டும், யாழ்வகைகளும், அவற்றின் பண்வகைகளும் கற்றுத் தேர்ந்தவள் நீ. பல மொழிகளில் பாடல்வகைகள் அறிந்தவள் நீ. மத்தளமும், வேய்ங்குழலும் கற்றவள் நீ. பள்ளியறையில் என்னவிதமான அலங்காரம் செய்துகொள்ளவேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் நீ. ஒழுங்கமைவுடன்கூடிய பருவமாற்றங்களை உடையவள். உடலின் பல்வேறு உறுப்புகளால் செய்யும் அறுபத்துநான்கு கரணங்களை அழகாக அபிநயம்பிடிக்கத்தெரிந்தவள் நீ. மற்றவர் மனதில் இருப்பதை அறிந்து இதமான வார்த்தைகளைப் பேசத்தெரிந்தவள் நீ. மற்றவர்முன்பு தோன்றாமல் இருக்கத் தெரிந்தவள் நீ. ஓவியம்தீட்டுவதில் வல்லவள் நீ. மாலைதொடுக்கத்தெரிந்தவள் நீ. ஒவ்வொரு பொழுதிற்கும் ஏற்ப அழகாக அலங்காரம்செய்துகொள்பவள் நீ…
View More ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]இம்மைச் செய்தது
பொய்க் குற்றம் சாட்டிப் பரதனைக் கொல்வித்தவன் இப்பிறப்பில கோவலனாகப் பிறந்தான். பரதன் மனைவி அந்நிய நாட்டில் பட்ட துயரத்தைத்தான் அவள் சாபப்படி கோவலன் மனைவியாகிய நீ அனுபவித்தாய்’….
… கழிந்த பிறப்பில் செவ்விய மனம் இல்லாதோருக்கு, அக்காலத்துச் செய்த தீவினை வந்து பலிக்கும் காலத்தில் இப்பிறப்பில் செய்த நல்வினை வந்து உதவாது. இந்தத் தீவினை பலிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ அந்த நல்வினை அதற்குரிய நற்பலனைத் தருமே அன்றி முன்செய்த தீவினையை இப்பொழுது செய்த நல்வினை அழிக்காது. புண்ணியபலனையும் பாவத்தின் பலனையும் தனித்தனியே அனுபவித்துக் கழிக்க வேண்டுமேயன்றி அவை ஒன்றையொன்று ஒழியா என்பது மதுராபுரித் தெய்வம் கூறியதன் கருத்து.
View More இம்மைச் செய்ததுவேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3
சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.
View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3