தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டாய்வாளர்களுள் ஒருவரான புலவர்.செ.இராசு (85) நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். கொடுமணல் அகழாய்வுக்கு மூல காரணமாக இருந்தவர்.. மாவட்ட ஆட்சியரோ “கலைஞர் உங்கள் மீது மிகவும் வருத்தத்திலிருக்கிறார். தினமணியில் வெளிவந்த தமிழ்ப்புத்தாண்டு குறித்த கடிதம் உங்களால் எழுதப்படவில்லையென்றும் வேறு யாரோ உங்கள் பெயரில் எழுதி அனுப்பிவிட்டாரென்றும் நீங்களே ஒரு கடிதம் எழுதுமாறு கலைஞரே கேட்டுக்கொண்டாரென்று கலைஞரின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார். புலவர்.இராசு அவர்கள் மீண்டும் தமது நிலைப்பாட்டை மென்மையாகவும், அதே நேரத்தில் உறுதிபடவும் வலியுறுத்திக் கூறிவிட்டுத் திரும்பிவிட்டார். தாம் சரியென்று மனப்பூர்வமாக நினைக்கிற ஒரு கருத்தினை வெளிப்படுத்துவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியாக நிற்கிற மனிதர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. அருகி வருகிற அத்தகைய உயர்ந்த மனிதர்களுள் புலவர் இராசு அவர்களும் ஒருவராவார்..
View More அஞ்சலி: ஆய்வாளர் புலவர் செ.இராசுTag: கல்வெட்டுக்கள்
ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது
சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள் – முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது…
View More ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்ததுஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்
சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார். பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் “*ஆணைநமதே *” என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்… நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது. அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர். பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” என்று உள்ளது…
View More ஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்… தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்…
View More அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்திவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு
தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. “தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம் பாகத்தில் கல்வெட்டுக்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் தமிழகத்துக்கு வேதத்தின் பங்களிப்பையும் நிறுவியுள்ளேன். இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயமும் ஆதாரங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை” என்றார் டாக்டர் நாகஸ்வாமி….
View More வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடுஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்
1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் வருடம் பழமையான கல்வெட்டுகளின் மீது கொஞ்சம் கூட வரலாற்று அறிவே இல்லாத அரசு அதிகாரிகள் எதோ பெரிய சமயப் பணி செய்தது போல காட்டி கொள்ள தங்கள் பெயர்களை எழுதி ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளனர். இது மட்டும் இன்றிப் பல இடங்களில் டைல்ஸ்(Tiles) ஒட்டிக் கோயிலின் பாரம்பரியத்தை அழித்து உள்ளனர். அது மட்டுமா? பல சிற்பங்கள் குப்பைகளாக கோயில் மதில் சுவர் ஓரங்களில் போடப்பட்டு உள்ளன…
View More ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்