மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும்குழு, நேராக தார் ரோடின் வழியாகவே ஊர் எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து.. முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்… ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும்…
View More என்னுள்ளில் மார்கழிTag: கிராமச்சிறுவன்
கையாலாகாதவனாகிப் போனேன்! – 2
“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று இழுத்தாள் மூதாட்டி.
“வாங்க ஐயா. தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.”