மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
பரம்பொருளான சிவனோ அண்டத்திலிருக்கும் அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

View More மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்

என்னுள்ளில் மார்கழி

மேலப்பட்டி கிருஷ்ணன் கோவிலில் பூஜை முடித்து, அங்கிருந்து பஜனைப் பாடல்களோடு துவங்கும்குழு, நேராக தார் ரோடின் வழியாகவே ஊர் எல்லை வரை சென்று, அங்கிருந்து ஊருக்குள் நுழைந்து, பின் தெரு வழியாக வந்து, வழியில் சிறு சிறு கோவில்களிலெல்லாம் நின்று பூஜை முடித்து, மறுபடியும் பாடிக்கொண்டே, சன்னதி தெருவைத் தாண்டி ஓடைப்பட்டியில் நுழைந்து.. முத்தியாலம்மன் கோவில் தாண்டி, மறுபடியும் கோவில் வந்துசேரும்போது வெளிச்சம் வந்திருக்கும். பல்லாண்டும், பாவையும் பாடி மறுபடி ஆராதனை முடித்து ப்ரசாத விநியோகம். சிறுவர்கள் கூட்டம் அதிகமிருக்கும். பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு முடிந்திருக்கும்… ஹேமலதா மட்டுமல்ல, வகுப்பிலிருக்கும் எல்லா பெண் நண்பர்களும் மார்கழியில் கூடுதல் அழகாகி விடுவார்கள். நட்பு கூட இன்னும் அழகாகி விட்டது போல்தான் இருக்கும்…

View More என்னுள்ளில் மார்கழி

சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1

சங்க இலக்கியத்தைப் பேசவந்த எழுத்தாளர் சைவத்தையும் சாடியுள்ளார். ஒரு பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்… திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன. பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன…

View More சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1

பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை

துயில் எழுப்புதலும், நீராட அழைத்தலும் இனிய ராகங்கள். வைகறையில் மானுடத்துக்கு இதைவிட இனிமை வேறு எதுவுமில்லை… அழகெல்லாம் உருகி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம், பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம்.. மாணிக்கவாசகரிடம் ஞானச்சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். இருவர்தம் பாவைப் பறவைகளும் ஆன்மவெளியில் பறக்கும் உயரங்களோ..

View More பாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை