உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன….
View More வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்Tag: குடும்ப ஆரோக்கியம்
சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]
ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்… தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்… ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது?
View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]