வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்

இந்தியா வலுவடைய என்ன தேவை என்று கேட்டால் பொருளாதார பலம் என்றுதான் நம்மில் அநேகரும் சொல்வார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தாமல் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு நகர்ந்து செல்லமுடியாது. இதை ஒருவராலும் மறுக்கமுடியாது. ஆனால், பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்துபவர்கள் ஓர் அடிப்படையான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் குடும்ப வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை.

இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன.

நம் சமகாலத்திய குறைபாடுகளைப் போக்கி வலுவான குடும்பத்தையும் வளமான தேசத்தையும் கட்டமைக்க விரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.

வலுவான குடும்பம், வளமான இந்தியா

பேரா. ப.கனகசபாபதி
கிழக்கு பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள்: 240
விலை: ரூ. 160
இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.

பேரா. ப.கனகசபாபதி அவர்கள் பாரதீய சிந்தனை வழி பொருளாதார வளர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்.

இவர் எழுதியுள்ள “பாரத பொருளாதாரம்: அன்றும் இன்றும்” என்ற நூல் பாரதத்தின் பண்டைய பொருளாதார நிலை தொடங்கி, பிரிட்டிஷ் பிடியில் சிக்கி சீரழிந்தது & சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மீண்டெழும் இந்தியாவின் பொருளாதார அடிப்படை அம்சங்கள் ஆகியவை குறித்த ஒரு முழுமையான பார்வையை அளிக்கிறது.

2 Replies to “வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்”

  1. “உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன”
    ஆசிரியர் சொல்வது 100 சதம் உண்மை. தற்போது குடும்ப உறவுகள் பற்றிய பல குழப்பங்கள் நகர்ப்புறங்களில் நிலவுகின்றன. ஆனால் ஆண்மையும் பெண்மையும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது தான் வாழ்க்கை என்று நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தார்கள்.

    இப்புத்தகம் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். ஆங்கிலத்திலும் இது போன்று வந்தால் நன்றாக இருக்கும்.புத்தக விமர்சனம் இங்கே எழுதப்பட்டாலும் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *