காசு கொடுத்தால், இப்பொழுது சில கோவில்களுக்குள் முன்னால் சென்று தரிசனம்செய்யலாம். வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தர்ம தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.
இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது. கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.