பழங்காலத்தில் கோவில் வழிபாடு

இப்பொழுது சில கோவில்களுக்குள் சென்று இறைதரிசனம் செய்து வழிபடுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. காசு கொடுத்தால், முன்னால் சென்று தரிசனம்செய்யலாம்.  இல்லாவிடில், வரிசையில் மணிக்கணக்காக நின்று, கடைசியில் தரிசனம் கிடைத்தால், ‘போ! போ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.  சில விநாடிகள்கூட தமது உள்ளக்கிடக்கையைக் கொட்டி, தெய்வத்தின் திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் காணமுடிவதில்லை.  மின்னல் மின்னி மறைவதுபோல தெய்வத்தின் காட்சி நமது கண்ணைவிட்டு நீங்கிவிடுகிறது.  ஏக்கத்துடன்தான் வெளிவருகிறோம்.

அர்ச்சனை செய்யக்கூட முடியாது. அர்ச்சகர் நம் கண்ணில் தெய்வத்தைப்போல ஓரிரு விநாடிகள்தான் தென்படுவார். 

இருந்தாலும், அக்கோவில்களில் கூட்டத்திற்கு என்றுமே குறைவில்லை.  நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போகிறது.

இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால் – செல்ல மனமிருந்து – அங்கும் இறைவன்/இறைவி குடிகொண்டுள்ளனர் என்ற நினைப்பு வந்து அங்கு சென்றால், வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது.  கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.  நாம் முன்பு விவரித்த கோவில்களில் இருக்கும் ஜே ஜே என்ற கூட்டத்தில் நூற்றிலென்ன, ஆயிரத்தில் ஒரு பங்கு கூட்டம்கூட அங்கு இல்லை.

கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகளும் அங்கில்லை.  எங்கோ மூலையில் ஒரு மங்கலான விளக்கு மினுக், மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது.  நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் மக்களும் இல்லை, ‘போ, போ’ என்று விரட்டும் கோவில் காவலரும் இல்லை.

இறைவன்/இறைவி – நாம் மட்டுமே அக்கோவிலில்.  வேண்டும் அளவுக்கு நமது உள்ளக் கிடக்கையை மனம்விட்டு உரக்கச் சொன்னாலும் அது அத்தெய்வங்களின் காதில் மட்டுமே விழும்.  மற்றவர் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் தேவையில்லை.  யாராவது அங்கிருந்தால்தானே, நாம் சொல்வது அவர்கள் காதில் விழுவதற்கு?

அர்ச்சகர்கூட சில கோவில்களில் காணப்படுவதில்லை.  நாம் தேடிக்கொண்டு சென்றால், அகப்படுவார்.  அருச்சனை செய்யவேண்டுமென்றால் நம்மை வியப்பு-கலந்த மகிழ்வுடன் பார்ப்பார்.  பக்தி சிரத்தையுடன் அருச்சனை செய்வார்.  நாம் கொடுக்கும் காணிக்கையை மிகவும் நன்றியுடன் பெற்றுக்கொள்வார்.

மேலே விவரித்த இருவிதக் கோவில்களைத்தான் நம்மால் காணமுடியும். 

பழங்காலத்தில் கோவில்கள் இப்படித்தான் இருந்தனவா?  வழிபாடுகள் கோவில்களில் இப்படித்தான் நடந்தனவா?

எப்படி நடந்தன என்பதை நமக்குத் தமது தோத்திரங்கள், பாசுரங்கள் வாயிலாக சைவ, வைணவக் குருமார்களும், ஆள்வார்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.  கோவில்கள் இப்படித்தான் அன்று இயங்கின என்று நாம் அறிந்துகொள்ள அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

தமது சொல்வன்மையால் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட திருவாதவூரார் நம்மை அவர் காலத்துக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கிறார்.  முதலில் அவருடன் செல்வோமா?  தமக்கே உரிய மாணிக்கச் சொற்களாக, இறைவழிபாட்டை மாலையாகத் தொகுத்து நமக்கு விளக்குகிறார்.

“கோவிலை நெருங்கும்போது, யாழ், வீணை போன்ற இசைக் கருவிகளிலிருந்து எழும் இன்னிசை நம்மைப் பரவசப்படுத்தி அழைக்கிறது.  இந்த இசையின்ப வெள்ளத்தில் நீந்தி நாம் உள்ளே செல்கிறோம். அங்கு பாணர்கள் இசைக்கருவிகளை மீட்டி, இறைவன்மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி ஆனந்தவெள்ளத்தில் ஆழ்வதையும், நம்மை ஆழ்த்துவதையும் காணலாம்.

ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்களுடன், பலவிதமான தோத்திரங்களுடன் இறைவன்முன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு வேதம் மட்டுமல்ல, நான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள் பிழையின்றி அதை ஓதுகின்றனர்.  அவர்கள் இப்படி ஓதிக்கொண்டிருக்கையில், இன்னும் சிலர் இறைவன்மீது துதிப்பாடல்களைப் பாடுகின்றனர்.  இந்த வேதகோஷத்திலும், தோத்திரப்பாடல் ஒலிகளுடனும், வீணை, யாழ் இவற்றின் நாத வெள்ளமும் நம்மை இறைவனைத் தரிசித்து இறையருள்பெற அழைக்கிறது

“இன்னொரு பக்கத்தில், இறைவன் திருமேனியை அலங்கரிக்க நெருக்கமாக மலர்களைத் தொடுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.  தமது கைகளையே மலர்மாலையாக எண்ணி, அதைப் பின்னலாகப் பின்னி இறைவனை அந்த மாலைக்குள் அடக்க முயல்கின்றனர், வேறுசிலர்.

“சிலர் இறைவனைத் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர்.  இன்னும் சிலர் தமது குறைகளைச் சொல்லி அழுது, அதைப் போக்கி அருளுமாறு புலம்புகின்றனர். வேறுசிலர் தம்மை வருத்திக்கொண்டு, கோவில் தரையில் புரண்டு, அவனது கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்து, தம் மனவிருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர்.

“மற்றும் சிலர், தலைக்குமேல் கைகளை உயர்த்திக்கூப்பி, இறைவனுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக நிற்கின்றனர்.  

“திருப்பெருந்துறை என்னும் புண்ணியத் தலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!  நீ எனக்கு இறைவனாகத் தலைவனாகத் தந்தையாகத் தாயாகத் தடுத்தாட்கொண்டு உனது இனிய அருளை வாரிவழங்குகிறாய்!  இல்லையென்று சொல்லவில்லை.  ஆனால், உன் அருளைவேண்டி இத்தனை பேர் பலவிதமாக உன்னைத் துதித்து நிற்கிறார்களே! இவர்களுடைய குறையை நீக்க மாட்டாயா?  ஏன் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவது போல நடிக்கிறாய்?  நீ தூங்கியது போதும்.  என் பெருமானே!  உனது போலி உறக்கம் போதும்!  எழுந்திருந்து உன் அடியவர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கு!”

இதுதான் அன்றையக் கோவில்களில் நிகழ்ந்த வழிபாடு.  திருவாசகத்திற்கு உருகாதார் எவருமேயில்லை, அப்படி உருகாதவர் எப்படிச் எடுத்துரைத்தாலும் உருகமாட்டார் என்று தன் சொல்வன்மையால், பக்திப்பெருக்கால் மாணிக்கவாசகர் இயம்பிய திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் ஒரு செய்யுள்தான் பழங்கால் வழிபாட்டை விவரித்து இன்றும் மார்கழி மாதந்தோறும் பாடப்படுகிறது.

இன்னிசை வீணையர் யாழின ரொருபால்

இருக்கொடு தோத்திர மியம்பின ரொருபால்

துண்ணிய பிணைமலர்க் கையின ரொருபால்

தொழுகைய ரழுகையர் துவள்கய ரொருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி யெழுந் தருளாயே!

ஆனால், மாணிக்கவாசகர் விவரித்த கோவில் வழிபாட்டை நாம் என்று காண்போமோ, அது அந்த உமையொருபங்கன், சிவபெருமானுக்குத்தான் தெரியும்போலிருக்கிறது.

***

One Reply to “பழங்காலத்தில் கோவில் வழிபாடு”

  1. அன்பின் இணைய பாஜகவினர்,சங்கி நண்பர்களுக்கு வணக்கம். பாஜகவின் களத்தில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு தேவைப்படாது அதனால் கண்டுக்காம விட்டுருங்க.

    சமீபத்துல வெளியான KGF Chapter 2 வில் ஒரு காட்சியில் யாஷ் ஒரு வசனம் சொல்வார். இங்கே தலைகள் மட்டும் தான் மாறும் கிரீடம் எப்பவுமே ஒண்ணுதான் என்று. தமிழக பாஜகவும் கிட்டத்தட்ட அப்படித்தான் இங்கு தலைகள் மட்டும் தான் மாறும் ஆனால் தபாசகவின் சித்தாந்தம் ஒரு போதும் மாறாது. அப்படிப்பட்ட கட்சியில் அண்ணாமலை என்ற ஒருவர் உள் நுழைந்து அரவக்குறிச்சியில் போட்டியிடுகின்றார் என்று தெரிந்ததும் உண்மையான பற்றுடைய என்னற்ற இளைஞர்கள் அவருக்காக அந்த தொகுதியைச் சுற்றி முகாமிட்டு உழைத்தனர். “என்னடா இது இந்த ஆளுக்கு இப்படி ஒரு மவுசுன்னு கோபத்துல” எதிர் கட்சிகள் ஏதும் செய்யல மாறாக பாசக சித்தாந்த சில்பான்சுகள் வழக்கம் போல அங்கையும் வந்து விழ இருந்த கொஞ்ச நஞ்ச ஓட்டையும் கெடுத்து விட்டுட்டு போனாங்க. அந்த கருமத்தையெல்லாம் நேரில் பார்க்க வேண்டிய சூழலிலும் இருந்தேன் அதிலும் சிலருடன் கூடவும் பயணிக்க கூடிய நிலை. அதெல்லாம் நினைச்சா இப்பவும் குமட்டிகிட்டு வரும்.

    ஒரு பக்கம் தபாசக கரகாட்ட கோஷ்டி இன்னொரு பக்கம் சோசியல் மீடியா சிஞ்சாக் கோஷ்டி என அரவக்குறிச்சி தொகுதியே ஒரே திருவிழாக் கோளம் கொண்டிருந்தது. இவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அண்ணா தோல்வியுற்றார். அப்பாடா நினைச்சது நடந்துடிச்சி என சித்தாந்த சில்பான்சுகளும் ஐபிஎஸ் எல்லாம் அவ்ளோ தான் இனிமே தலையெடுக்கவே முடியாதுன்னு நிம்மதி பெருமூச்சி விட்டு முடியுறதுக்குள்ள மொரட்டு டுவிஸ்ட் ஆகி எல்.முருகன் மத்திய அமைச்சராகவும் யார்டா அடுத்த தலைவர்னு சித்தாந்த சில்பான்ஸ் எல்லாம் காலரை தூக்கி விட முயற்சிக்கையில் “கைய மடக்கி உள்ள வைங்கடா” என்ற கெத்து நடையோடு அண்ணாமலை தலைவர் ஆனார்.

    அண்ணாமலை தலைவர் ஆனதும் வழக்கம் போல இந்த செமி திராவிட சித்தாந்த கிரீடத்தை தூக்கி தலையில் வச்சிக்குவார் என்று நினைத்தனர் சில்பான்ஸுகள். என்னைப்போன்ற சிலருக்கு அவர் தலைவர் ஆனதும் முதல்வன் அர்ஜீன் மாதிரி தடார் புடார் என ஏதாச்சும் செய்வார் என்ற கற்பனை இருந்தது. அவருக்காக ஓடி ஓடி போஸ்ட ஒட்டி நோட்டீஸ் கொடுத்து கூட்டத்தோட கூட்டமா “இதாங்க நேரம் இனி எல்லாம் மாறும்”னு கத்தின அந்த இளைஞர் கூட்டத்தால் கமலாலயம் நிறையும் என நினைத்தேன். ஆனால் அது நடக்கல அங்கே அவரோடு சுத்திகிட்டு இருந்த ஆட்களில் சிலரைத் தவிர கமலாலயம் பக்கம் ஒருத்தரையும் காணல. கொஞ்சம் கொஞ்சமாக அவரைச் சுற்றி இருப்பவர்களை தாண்டி மட்டுமே அவரை அணுக முடியும் என்ற நிலை வந்தது. இவரும் இந்த சில்பான்ஸ் கிரீடத்திற்குள் சிக்கிட்டார் என நினைத்த போது தான் அவர் அங்கு எவ்வளவு முயற்சி செய்து இந்த சில்பான்சுகளை கதர விட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை உணர முடிந்தது.

    அவர் முதல் பணியாக கிரீடத்தை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியது தான் அங்கே பெரிய கலவரம். அங்க இங்க என துள்ளி பார்த்து கடைசியில் அவர் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவப்பெயரை ஏற்படுத்த இந்த சில்பான்ஸுகள் நாடியது எல்லாம் மற்ற கட்சியினர் மற்றும் இந்த திடீர் பாஜக ஆதரவு இணைய பிரமுகர்கள் தான். கே.டி.ராகவன் பிரச்சினை, மதன் ரவிச்சந்திரன் பிரச்சினை என அவரை கலங்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியில் முடிய இனி வரும் நாட்களிலும் அவரை நோக்கி எய்யப்படும் அம்புகள் தவிடு பொடியாகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    இப்ப விஷயத்திற்கு வருகின்றேன். கார்த்திக் கோபிநாத் யார்? அவர் கைதுக்கு அண்ணாமலை டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். சுப்ரமணிய சுவாமி டுவீட் போடுறார். கிஷோர் கே சுவாமி டுவிட்டரில் போராடுகின்றார் என ஒரு தரப்பும். அண்ணாமலையும் திருடன் தான். கார்த்திக் கோபிநாத்தும் அண்ணாமலையும் கூட்டு இந்து பெயரைச் சொல்லி கொள்ளையடித்தார்கள் என்ற ரீதியில் இன்னொரு தரப்பும். கார்த்திக் கோபிநாத் எல்லாம் ஒரு ஆளா, கடவுள் பேரை சொல்லி கொள்ளையடித்தவனுக்கு இதெல்லாம் நடக்கனும் ஆனால் இதுல அண்ணாமலையை ஏன் இழுக்கனும் என்று இன்னொரு தரப்பும் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

    ஒரு கோவில் இடிக்கப்படுகின்றது இடித்தவர் யார் என்பது கூட இன்னும் தெளிவாக புலப்படவில்லை. இணைய சங்கிகள் சார்பில் அந்த கோவிலை புணரமைக்கலாம் என்று முடிவு செய்யப்படுகின்றது. அதில் இணைய சங்கிகள் சிலருடன் மூத்த சங்கி ஜான் ரவி அவர்களும் பாஜகவின் அஸ்வத்தாமன் அவர்களும் முக்கியமான நபர். எப்படி சரி செய்வது பொது மக்களிடம் வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்ட போது தான் தோழர் கார்த்திக் கோபிநாத் உள்ளே புகுந்து இந்த புண்ணிய காரியத்தில் என் பங்கும் இருக்கனும் என்று அமைதியாக கேட்டுக்கொண்ட போது “அதனாலென்ன வாங்க கார்த்திக் நல்ல காரியம் செய்ய நாள் நட்சத்திரமா பார்க்கனும்” என்று மூத்தவர் ஜான் ரவி சிலிர்த்து போய் சில்லரைய விட அனைவரும் முடிவு செய்து மிலாப் நிறுவனத்தின் மூலம் நிதி திரட்டப்படுகின்றது.

    மொத்தமா எதிர் பார்த்ததே 5 லட்சம் தான் வரும் என. மொத்தமா ஒரு 50 ஆயிரம் மட்டும் வசூல் ஆகியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. அவனவன் அவன் வேலைய பார்க்க போயிருப்பான். உடைஞ்ச கோயில அந்த ஊர் காரங்களே ஆளுக்கு கொஞ்சமா காச போட்டு கட்டியிருப்பாங்க. ஆனால் இங்க டுவிஸ்ட்டே முதல் வரியில் சொன்ன இணைய சங்கிகள் தான். ஒக்காலி சிலிர்த்து போயி சில்லரைய அவன் அவன் வீசி எறிய வசூல் பிச்சிகிட்டு போயிருச்சி. 34 லட்சம் வரை வசூல் ஆனது வரை எனக்கும் இந்த தகவல் தெரியும் அதன்பின்னர் ஒரு கட்டத்தில் எவ்வளவு தொகை என்றே தெரியவில்லை நிலை வந்துவிட்டது. மிலாப்பில் வசூல் செய்ததால் இந்த பணத்தை திருடவோ கையாடல் செய்யவோ முடியாது அது அவ்வளவு எளிதும் கிடையாது. அப்படியே கார்த்திக் இந்த பணத்தை திருடியிருந்தால் கோயில் திருப்பணி செய்ததர்கான பில் மற்றும் ஆதாரத்தை மிலாப்பிடம் கொடுத்தால் மட்டுமே பணத்தை எடுத்திருக்க முடியும் , இல்லையெனில் வேற ஏதாவது விஞ்ஞான திருட்டு செய்திருக்கனும். அப்படியெல்லாம் போலி பில் கொடுத்து பணத்தை எடுத்திருப்பார் என்றெல்லாம் எனக்கும் தோன்றவில்லை அது போக இணைய சங்கிகளுக்கும் தோன்றவில்லை. ஆனால் ஏன் கார்த்திக் கோபிநாத் மீது ஒருதரப்பு இணைய சங்கிகளுக்கு கோபம் என்ற கேள்வி வருகின்றது அல்லவா? அதற்கான பதில் தான் இது

    பணம் வசூல் ஆனதும் அண்ணாமலை அவர்களை அழைத்து இந்த திருப்பணிகளை தொடங்கலாம் என்பது அந்த குழுவில் உள்ள அனைவரது விருப்பம். ஆனால் கார்த்திக் திடீரென பல்டியடித்து அவசரம் அவசரமாக தனது யுடியூப் சேனலில் இந்த கோவிலுக்காக பணம் வசூலித்ததில் எந்த அரசியல் கட்சியும் வந்து ஸ்டிக்கர் ஒட்டிக்க வேண்டாம் இது முழுக்க முழுக்க இளையபாரதம் சேனலும் நானும் மட்டும் உழைச்சி கெஞ்சி சேர்த்த பணம் அது இது என ஒரு வாரத்துல ஒன்பது ஆங்கிலில் மாற்றி மாற்றி பேச மொத்த சங்கி கூட்டத்திற்கு என்னடா இந்த பையன் இப்படி நேரத்து நேரம் மாத்தி மாத்தி பேசுறான். அவசரப்பட்டு இந்த பையன் கையில பொறுப்ப கொடுத்துட்டோமே என்று வருந்தி எதுக்கு இதெல்லாம் பொதுவில பேசி அடிச்சிகிட்டு ஒதுங்கிடலாம் என நினைக்கையில் எதிர் தரப்பு இந்த விஷயத்தை கையில் எடுத்து அதில் அண்ணாமலையை தொடர்புபடுத்தி பேசவும் இந்த கோவில் விஷயத்தை தொடங்கிய ஜான் ரவி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டு இத்தோட இந்த சில்பான்சுங்க சங்காத்தத்த விடுங்கடா என்ற ரீதியில் ஒதுங்கிவிட்டார். என்னடா இது இவரே ஒதுங்கிட்டார் நமக்கெல்லாம் என்ன வேலை என நிறைய பேர் அதில் ஒதுங்கினர்.

    சில மாதங்கள் ஓடியது. அதன் பின்னர் கார்த்திக் அவர்கள் சவுக்கு சங்கரிடம் போய் இணையத்தில் ஒரண்டை இழுக்க அவர் இவரை போட்டு துவைப்பதற்கு தொக்கா கிடைச்ச விஷயம் தான் இந்த கோயில் கலெக்‌ஷன் மேட்டர். இதுல இவர் பக்கம் பெருசா ஒரு ஞாயமும் இல்லை ஆனாலும் வசூலிச்ச காசை எடுக்கல. அதுக்கு ஆதாரம் இருக்கு அத வைச்சு நீதி அது இதுன்னு ஃபார்ம் ஆகி வந்துகிட்டு இருக்க கேப்புல ஒரு ஆடியோ ரிலீஸ் ஆகுது. அதுல அவர் அண்ணாமலைக்கு நான் ரொம்ப க்ளோஸ் என்று ஒரு வார்த்தை விட்டுருப்பார். அதை ஒரு ஆதாரமாக சவுக்கு சங்கர் இணையத்தில் பரப்பி விட ஒரு ப்ரஸ் மீட்ல மீண்டும் அண்ணாமலை இந்த விஷயத்தில் வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்கப்படுகின்றார். இன்று கார்த்திக் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

    திமுகவிற்கு எதிர் கருத்துக்களை பேசும் ஒரு யுடியூபர் என்ற ரீதியில் அந்த பதிவு இடப்பட்டிருந்தாலும் சக சங்கிகளுக்கு அதில் சற்று மன வேதனை இருக்கின்றது என்பதை அறிவேன். கிஷோர் கைதின் போதும் அண்ணாமலை போட்ட டுவீட் அதில் ஒரு தரப்பு சங்கிகளுக்கு வருத்தம். அதே போல் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட போது அண்ணாமலை டுவீட் போட்ட போது அதில் ஒரு தரப்பு சங்கிகளுக்கு வருத்தம். இணைய சங்கிகளைப் பொருத்தவரை நாம் நினைத்ததை தான் கள சங்கிகளும் செய்ய வேண்டும் என்ற ஒரு ஏக்கம் இருக்கின்றது ஆனால் இணையத்திலேயே பல தரப்பு சங்கிகள் இருக்கையில் களத்தில் எவ்வளவு தரப்பு இருப்பார்கள். இவ்வளவையும் தாண்டி ஒரு தனிமனிதன் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதான காரியமா? அண்ணாமலைக்கு அறிவுரை கூறக்கூடிய நிலையில் களத்தில் இருப்பவர்களே இல்லை என்ற நிலையில் ஆயிரம் ரீடுவீட் ஆயிரம் லைக் பத்தாயிரம் வியூஸ் வாங்கிட்டால் அந்த நிலைக்கு வந்துவிட்டதாக இணைய புரட்சியாளர்கள் நினைத்துக் கொண்டால் உங்களை நினைத்து நீங்கள் தான் சிரித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு சாதாரண யூடியூபர் எப்படி அமித்ஷா வரவேற்புக்கு போனார் என்ற கேள்வி இணைய சங்கிகள் மற்றும் கள சங்கிகளுக்கும் உண்டு. கிஷோர் மாரிதாஸ் என மொரட்டு சங்கி ஆதரவு இணைய சங்கிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு எப்படி இந்த கோயில் பார்ட்டி கார்த்தி கோபிநாத்துக்கு கிடைச்சிச்சி என்ற அதிர்ச்சி எனக்கும் கூட இருந்துச்சி. அங்கதான் நிக்கிது நம்ம தபாசகவின் சித்தாந்த சில்பான்ஸ் கோஷ்டிகளின் வேலை. அண்ணாமலையை சுற்றி அவர்கள் ஏதோ ஒரு வித சதிவலையை பிண்ணி வைத்திருக்கின்றனர் என்பது மட்டும் லேசாக புரிகின்றது. கூடிய விரையில் இதையும் எதிர்கொண்டு ஜெயித்து வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. பார்க்கலாம் ஜெயிக்கிறது கிரீடமா தலையா என்று.

    எல்லாத்தையும் தாண்டி ஒரு ஹம்பில் ரிக்குவஸ்ட். யாரச்சும் ஒருத்தன் திடீர்னு வந்து நானும் சங்கிதான்னு சொன்னா…. கொஞ்சம் ஆக்ரோஷத்த குறைச்சிகோங்க. சந்தர்ப்பத்துக்காக சங்கியாக மாறினவர் மாறுபவன் என்றைக்காக இருந்தாலும் பேக் அடிச்சி நமக்கு ரிவிட் அடிப்பான் என்பதை மனதில் கொள்க. ப்ளீஸ் எமோஷன கொஞ்சம் குறைச்சிக்கோங்க.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *