வன்முறையே வரலாறாய்…- 23

தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்… ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது…

View More வன்முறையே வரலாறாய்…- 23

வன்முறையே வரலாறாய்…- 22

1946 ஆகஸ்ட்: முகமது அலி ஜின்னா வாளுடன் இருக்கும் படத்துடன் “…உங்களது வாட்களை எடுக்கத் தயாராகுங்கள்….ஓ காஃபிர், நீ ஒன்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளாதே. உனது அழிவு காலம் நெருங்கி விட்டது; படுகொலைகள் இனித் துவங்கவிருக்கிறது” என்ற செய்தி தாங்கிய சுற்றறிக்கை ஒன்று கல்கத்தா மேயரால் வெளியிடப்பட்டது. கிரிமினல்களையும், கொலைகாரர்களையும் ஒன்று திரட்டிய முஸ்லிம் லீக், அவர்களுக்குச் சகலவிதமான பயங்கர ஆயுதங்களையும் வழங்கியது… இந்தச் சம்பவங்களை நினைவு கூறும் லாகூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி கோஸ்லா, “தெருக்களெங்கும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன….இந்துக் குழந்தைகள் கூரைகளின் மீதிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்…பல குழந்தைகளும், மற்றவர்களும் கொதிக்கும் எண்ணை ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார்கள். இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பின்னர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார்…

View More வன்முறையே வரலாறாய்…- 22