வன்முறையே வரலாறாய்…- 23

தேசப் பிரிவினையின் போது, நவகாளி காங்கிரஸ் அங்கத்தினர்களால் கல்கத்தா காங்கிரஸ் அலுவலகத்திற்கு அக்டோபர் 15, 1946-இல் அனுப்பப்பட்ட ஒரு தந்தி நடந்த பயங்கரங்களுக்கு சான்றாக உள்ளது.. நான்கு இலட்சம் இந்துக்கள் வாழ்ந்த நவகாளியில், ஏறக்குறைய 95 சதவீதம் பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம்களாக்கப் பட்டார்கள். மறுத்தவர்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்… ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் மனைவிகளும் மகள்களும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு முஸ்லிம் குண்டர்களுக்கு மணம் செய்விக்கப்பட்டார்கள். இந்துக்கள் வசித்த பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டு முற்றிலுமாக அழிந்தன. இந்துக் கோவில்கள் உடைத்தெறியப்பட்டன.. பீகார் முஸ்லிம் லீக் வெளியிட்ட இன்னொரு சுற்றறிக்கை முகமதலி ஜின்னாவிடம், “இந்து காஃபிர்களுக்கு இத்தனை வருடங்கள் நேரம் கொடுத்தோம். இருண்ட காஃபிரி மதமான இந்துமதத்தை அழித்து, உலகிற்கு ஒளியூட்டும் இஸ்லாத்தை நிறுவ நமக்கு நேரம் வந்துவிட்டது. அரேபியாவில் இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தது போல இந்தியாவிலும் காஃப்ரி இந்துக்களைக் கொன்று இந்த உன்னத காரியத்தைச் செய்வோம்” என வலியுறுத்துகிறது…

View More வன்முறையே வரலாறாய்…- 23