ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
View More ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்Tag: சமஸ்தானம்
பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்
அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை [..] சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. [..] அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைகாரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும் [..]
View More பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்