அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்… முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்… “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்…”
View More வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்Author: வி.ரமணன்
கண்ணன் வந்தான்
நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை… இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது… ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்… வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்…
View More கண்ணன் வந்தான்அமெரிக்காவிலும் ஆலமரம்
..உட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. ..200 வருடங்களாக கிருத்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது…
View More அமெரிக்காவிலும் ஆலமரம்ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்
ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
View More ஆழமில்லாத கடலும் ஆழமான நம்பிக்கைகளும்இமயத்தின் மடியில் – 2
.கரடுமுரடான பாதையில் அந்தக் குதிரையில் போகும் போது காணும் காட்சிகள் எவரையும் கவிஞனாக்கிவிடும். தொலைவில் பளிச்சிடும் நீல்கண்ட் சிகரம், பனிமூடிய பல சிகரங்கள், அருகில் பசுமையான மலைகளின் இடையே சிலநாட்களுக்கு முன் பெய்த மழையினால் ஆங்காங்கே தோன்றியிருக்கும் அருவிகள், மலயின் கீழே பள்ளதாக்கில் மந்தாகினி நதி மலைக்காடுகளுக்கே உரியமணம், தீடிரென வந்து நம்மை கடந்து மிதந்துபோகும் பனிமேகங்கள்…
View More இமயத்தின் மடியில் – 2இமயத்தின் மடியில் – 1
..கடல் கரும்பச்சை நிறத்தில் பாகீரதியும், இளம் செம்மண் நிறத்தில் சீறிப்பாயும் அலக்நந்தாவும், நிறங்கள் துல்லியமாக வேறுபட்டும், இணைந்தபின் இரண்டுமில்லாத ஒரு புதிய வண்ணத்தில் கங்கையாக ஒடுவதும் கண்கொள்ளாக் காட்சி..மிகச் சிறிய அளவில் மூலவர் மூர்த்தி, பத்ரிநாராயணர். மூன்று அல்லது நாலு அடி உயரம் தானிருக்கும். மிக அபூர்வமான கறுப்பு சாளகிராமத்தில் செதுக்கப்பட்டது. பெருமாள் பத்மாஸானத்தில் தியானத்திலிருக்கிறார்.
View More இமயத்தின் மடியில் – 1இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
“ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார்… மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம்… இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே…
View More இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்அட்சய பாத்திரம்
குழாயில் கொட்டும் சாம்பாரையும் சறுக்குமர வாய்க்காலில் சறுக்கிவரும் சாதத்தையும் ஆவி பறக்க ஹாட்கேஸ்களில் பாக் செய்யும் பணி.. வரிசையாக அணிவகுத்து நிற்கும் அவைகள் நிரப்பப்பட்டவுடன் பெல்ட் கன்வேயரில் பயணித்து முனையில் அதனைத் தொட்டுக்கொண்டிருக்கும் லாரியில் ஏறுகிறது. இந்த ஹாட்கேஸ்கள் அசையாமல் இருக்கும் வசதியுடன் அமைக்கப் பட்டிரும்க்கும் அந்த லாரிகளில் முதலில் தரவேண்டியது கடைசியில் என்ற ரீதியில் அடுக்கப்பட்டபின், ஒரு செக்யூரிட்டியுடன் பறக்கிறது. அந்த வினாடி முதல் லாரியின் போக்கு ஜீ.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. செல்லுமிடம் பெங்களூரு நகரின் அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகள். தயாரிக்கப்பட்ட உணவு குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு.
View More அட்சய பாத்திரம்தரையைத் தொடாமல் வரும் கங்கை
தங்கள் கிராமத்திலிருந்து ஹரித்துவாருக்கு நடந்தே போய், வழியிலேயே காவடி தயாரித்து, அதில் ஹரித்துவாரில் நிரப்பிய கங்கை நீரை சுமந்து வந்து, தங்கள் ஊரிலிருக்கும் சிவனுக்கு அமாவாசை அன்று அபிஷகம் செய்கிறார்கள்.. இந்த பிராத்தனை பயணத்தில் பங்கு கொள்ளுபவர்கள் ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு பஙகு பெற்றவர்கள் 50 லட்சத்திற்கும் மேல்…
View More தரையைத் தொடாமல் வரும் கங்கைபத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்
அந்த செல்வம் யாருக்கும் சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை [..] சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம் வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம் நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிககஷ்டம். நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே இன்றைய உலகம் இயங்குகிறது. [..] அதிக பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார். தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைகாரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும் [..]
View More பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்