சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது…இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை அழித்து நீர்த்து போக செய்ய காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டது. அப்பாவி சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை…

View More சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை. ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்…. ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். தாங்கள் 1984-ல் டெல்லில் நடந்த கலவரத்திற்கு தாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதில் வேடிக்கையாக அமைந்த்து…

View More ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா…

View More 1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

மண்குடமும் பொன்குடமும்

கண் முன் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டடனர். அப்படியானால், தினகரன் அலுவலகம் தன்னைத் தானே எரித்துக்கொண்டதா?… பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கலவரங்களில் சீக்கியர்கள் 2700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்… ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் வழக்குகள் தொடுப்பதும், ஆட்சி மாறியவுடன் அவை கைவிடப்படுவதையும் தமிழக மக்கள் தாராளமாகவே கண்டு வருகின்றனர்… குஜராத் நீதிமன்றங்களையே சந்தேகக் கண்ணுடன் விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் இப்போது அமைதியாக இருப்பது ஏன்?… வழக்குகள் மீது வெளிப்புறத்தில் இருந்து திணிக்கப்படும் மனோவியல் நிர்பந்தங்களும் கூட கடுமையான தீர்ப்புகளுக்குக் காரணமாகி விடுகின்றன. தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

View More மண்குடமும் பொன்குடமும்

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3

முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார்.

View More இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3