நாதஸ்வர இசையுடன் தான் தென்னிந்தியாவின் எந்தவொரு மங்கலமான மகிழ்ச்சிகரமான விசேஷங்களும் துவங்குகின்றன. தென்னிந்தியக் கோவில்களுடனும், தென்னிந்தியக் கலாச்சாரத்திலும் நாதஸ்வரமும் தவிலும் போல வேறு எந்த இசைக் கருவியும் இரண்டறக் கலந்ததில்லை. ஆண்டவனைத் துயில் எழுப்புவதில் இருந்து இரவு கோவில் நடை சாத்தும் வரை அனைத்து முக்கிய சடங்குகளும் நாதஸ்வர இசை இன்றி அமைவதில்லை.
View More சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு