கண்டிப்பாக இது அனிதாவே முடிவு செய்திருக்க முடியாது. அவரை மூளைச் சலவை செய்திருக்கலாம். அல்லது இது ‘கொலை’யாக கூட இருக்கலாம். இன்று அனிதாவிற்காக குரல் கொடுக்கும் அத்தனை தமிழக கட்சிகளும் நினைத்தால் நீட்டில் தேர்வெழுதிய அத்தனை தலித் மாணவர்களுக்கும் தங்கள் சொந்த செலவிலேயே மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவ்வளவு மெடிக்கல் கல்லூரிகளையும், அவ்வளவு பணபலத்தையும் இந்த அரசியல்வாதிகள்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்ய இவர்கள் என்ன தியாகிகளா? நீட் தேர்வில் பாதிக்கப்பட்டது இந்த திராவிட அரசியல்வாதிகள்தான். அதனால் திட்டம்போட்டு அனிதாவை பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வர பாஜக தமிழ்நாட்டில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதனால் பாஜகவை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடாக கூட இது இருக்கலாம். அதனால் அனிதா தற்கொலையில் சிபிஐ நீதிவிசாரணை வேண்டும். முதலில் திமுகவை விசாரித்தால் உண்மை வெளிவரலாம். வெளிவரும்… அனிதா சாவுக்கு ‘ஒரு தரப்பை’ கைநீட்டி வசைபாடும் முன் தயவுசெய்து இந்த
10 கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்யுங்கள்..