ஒருவன் கழுதை ஒன்றையும், கணிகை ஒருத்தியையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கிறான். சிலநாள் சென்று அவன் கழுதையை மட்டும் பார்க்கும்போது அங்கே கணிகையும் வந்திருப்பாள் என்ற அனுமானத்திற்கு வரமுடியுமா? முடியாது. ஏனென்றால் நெருப்பு இல்லாத இடத்தில் புகையில்லை என்று மேற்கோள் காட்ட்டப்படும் அந்த எதிர்மறை உடன்நிகழ்ச்சியாகிய வெதிரேகம் (வியதிரேகம்) பொருளின் இருப்பைச் சாதிக்கும் என்றால் நாய்வால் இல்லாத கழுதையின் பிடரி மயிரைக் கண்டவன் அது நாய்வாலோ அல்லது நரி வாலோ என்று மயங்குகிறான். அங்கு இரண்டுமே இல்லை என்று தெளிகிறான். அவனே வேறொரு இடத்தில் வால் ஒன்றைக் கண்டு இது நாய்வால் இல்லை என்று துணிந்தால் நரிவாலும் இல்லை என்று துணியலாமா? கூடாது.
View More தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30Tag: புத்தபிரான்
மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை
தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!
View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதைஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26
அவளேதான் ஒருமுறை புகார் நகரம் வந்து, உங்கள் சோழமன்னன் நெடுங்கிள்ளியின் மையலுக்கு ஆட்பட்டு அவனுடன் சேர்ந்து ஒரு ஆண் மகவை ஈன்றாள். பிறகு அந்தப் பச்சிளம் குழந்தையுடன் நாகநாடு திரும்பினாள். குழந்தையுடன் வந்தவள், தினமும் கடல் கரையில் கப்பல் ஏதாவது வருகிறதா என்று காத்திருப்பாள்.
View More ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13
‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன்.
View More அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]
புத்தபிரானுக்கு என்று வடிவமைக்கப்பட்ட பத்மபீடிகை அது. மரங்கள் அதன்மீது மணமில்லாத மலர்களைச் சொரிவதில்லை. பறவைகள் அதன்மேல் அமர்ந்து சப்தம் எழுப்பவோ, எச்சமிடவோ செய்யவில்லை. தேவர் தலைவன் இந்திரனால் புத்தபெருமானுக்கென்று சிறப்புடன் செய்துகொடுக்கப்பட்ட பீடிகை அது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அதனைக் காண்பவர்களுக்குத் தங்களது முந்தையப் பிறப்புகளை நினைவுபடுத்தும் தன்மையேயாகும்.
View More மணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]