இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம். கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம். அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள்.
View More பாஜகவும் இப்தார் விருந்தும்