கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள்… காஸியாபாத்தில் இந்து தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்பகுதிகளில் இஸ்லாமிய வெறியர்கள் தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வு செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது பச்சிளம் பெண்ணை கடத்தி சென்று சில நாட்கள் பிணையக்கைதியாகவும் வைத்து கொண்டு கற்பழிக்கிறார்கள் கயவர்கள் சீராஜ்தீனும் அவன் கூட்டாளிகளும். தன் உடன் பிறந்த தங்கையின் உடல் உறுப்புகளை சீண்டிய ஷானவாஸை அறைந்து விடுகிறார் சச்சின். அங்கிருந்து ஓடிப்போன ஷானவாஸ் தன் நண்பர்களை அழைத்து கொண்டு வருகிறார். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து சச்சினையும், கெளரவையும் முதலில் அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் கறி வெட்டும் அரிவாளை கொண்டு இருவரையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி எறிகிறார்கள். ஜாட்களின் பஞ்சாயத்தினர் ஷானவாஸை விசாரணைக்கு அழைக்க, வந்தவர்களை இஸ்லாமியர்கள் ஈவிரக்கம் இன்றி அடித்து கொன்ற காட்சிகளை , அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட உயிர் பிச்சை கேட்ட காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு அதை பார்த்து ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது… முல்லா முலாயமின் மகன் அகிலேஷ் குல்லாயோடு வந்து இஸ்லாமியர்களை யார் தாக்கினாலும் சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். மேலும் சில கூட்டு வன்புணர்வுக்கும், கொலைகளுக்கும் பதில் நடவடிக்கை யாரும் எடுக்க கூடாது என்று கோருகிறார்… இதை காஷ்மீர் மாடல் பிரிவினை என்கிறார்கள். இந்தியாவின் 300 நகரங்களில் மிக அபாயகரமாக வெடிக்க காத்திருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை வெடிகுண்டு பற்றிய விழிப்புணர்வு நம்மில் யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தமிழகத்தின் வ.களத்தூர், முத்துப்பேட்டை, கோவை, மேலப்பாளையம், காயல் பட்டிணம், இந்திய அளவில் ஹைதராபாத், மீரட், உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வன்முறைகளை பாருங்கள்…
View More முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்Tag: வகுப்புக் கலவரங்கள்
வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை
பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் 2013 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு அளித்த அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய அரவிந்தன் நீலகண்டன், வீர,ராஜமாணிக்கம் மற்றும் சில சமூக அக்கறை கொண்டோர் குழு கிராமத்திற்குச் சென்று இரு சமுதாய மக்களையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்தனர். அதன் அடிப்படையிலான கள அறிக்கை இங்கு தரப் படுகிறது…. தேர் நிற்கும் இடத்தை இல்லாமல் ஆக்குவதையும், தேரோடும் வீதிகளில் இந்துக்களின் மத ஊர்வலங்களையும் மணவிழாக்கள் இதர ஊர்வலங்களையும் நிறுத்துவதன் மூலமாக, தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் தம்மை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி, தம் பண்பாட்டு அடையாளங்களையும் சமுதாய ஒற்றுமையையும் குலைக்க நினைப்பதாக இந்துக்கள் கருதுகின்றனர்…. கோயில் தேர்களுடன் ஒரு இஸ்லாமியர் மிக இயல்பாக தம் மிதிவண்டியை இணைத்து வைத்திருந்ததையும் ஒரு பழமையான மதரசா இந்துக்கள் அதிகமாக வாழும் வீதியில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. இத்தகைய சமரச சூழ்நிலையில் மாநில அளவில் வ.களத்தூர் பிரச்சனையை பெரிதாக்குவோம் என முழங்கும் பாப்புலர் ஃப்ரெண்ட் சுவரொட்டிகளையும் காண முடிந்தது. இஸ்லாமியர் பாரம்பரியமாக சமுதாய பொறுமையும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதாகவும் இது முழுக்க முழுக்க பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஊர் ஜமாத்தினைக் கைப்பற்றியதால் ஏற்பட்ட நிகழ்வு எனவும் மணிவேல் கூறினார். பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைத்து வருவதாகவும் இளைஞர்களை தவறாக வழி கெடுத்து வருவதாகவும் திரு.ஹுசைன் அவர்கள் தெரிவித்தார்…..
View More வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை