ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….
View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்Tag: ஸ்பெக்ட்ரம் 2ஜி
2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…
View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?
நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?
View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா… இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.
View More ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]