அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்… எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை ஆதரிப்பதை அவரை ஆதரிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வை முறையாக எங்கு செலுத்த வேண்டும் என்கிற புரிதலின்றி செயல்படுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பது திண்ணம்….
View More ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?Tag: அதிகார வர்க்கம்
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2
பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில் பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை ஆமோதிக்க முடியுமா?
View More கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2