டிரம்ப்புக்கு ஆதரவாக டெட் குரூசும், எதிராக அரிசோனா செனட்டர் கிரிஸ்டன் சினெமாவும் பேசினர்.
அச்சமயம், டிரம்புக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திலிருந்த பலநூற்றுக்கணக்கான போக்கிரிகள், சட்டப் பேரவைக்குக் காவலாக நின்றிருந்த காவலர்களை அடித்துநொறுக்கிக்கொண்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர். கதவை மூடமுயன்ற காவலர்களுல் ஒருவரான ப்ரையன் சிக்னிக் என்ற காவலரைத் தலையில் அடித்து கதவுக்கு இடுக்கில் நசுக்கிப் படுகாயப் படுத்தினர். சிக்னிக், நாட்டுக்காக போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர். கடைசியில் தாய்நாட்டின் எதிரிகளுடன் போராடிப் படுகாயத்தினால் மறுநாள் வீரமரணமடைந்தார்.
Tag: அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4
கழுதைக்கட்சி ஆளுங்க நிறைய இருக்கற ஊரிலே குறைச்சலான வாக்குச் சாவடிங்களை வச்சா, நிறையப்பேரு ஓட்டுப்போட முடியாதுல்ல?[i] வரிசைலே நிறையப்பேரு இருப்பாங்க, வேலைக்கும் போகணும், மணிக்கணக்குலே நின்னு ஓட்டுப்போடவும் முடியாது. அதுனால கூட்டத்தைப் பார்த்துட்டு, வரிசைலே நிக்காம போயிடுவாங்க. இப்படி எதிர்க்கட்சி ஓட்டு அதிகமா விழாமப் பார்த்துக்கலாம், இல்லையா?இது என்ன அநியாயமா இருக்குன்னு வருத்தப்படாதீங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜம். இதைவிடத் தில்லாலங்கடி வேலையெல்லாம் நிறைய நடக்குது. அதைப்பத்தி நம்ப பேசக்கூடாது. ஆனா, எதுவும் சட்டத்துக்குப் புறம்பானதில்லே. பெரிய இடத்து விவகாரம் விட்டுடங்க.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 4அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3
ஒரொரு மாநிலத்துக்கும் அங்கே இருக்கற மாநிலச் செயலர்தான் (Secretary of State) வாக்குச் சீட்டுகளை எண்ணி, பட்டியலிட்டு, முடிவுகளுக்குச் சான்றளிக்கவேண்டும். ஒவ்வொரு கவுன்ட்டியிலேயும் – அதுதாங்க, இந்தியா மாவட்டம் மாதிரி — ஒரு பதிவாளர் இருப்பார். வாக்குகளைச் சேகரித்து, அதை எண்ணி, பட்டியல்போட்டு, அதுக்குச் சான்றளித்து, மாநிலச் செயலருக்கு அனுப்பவேண்டியது அவர் பொறுப்பு. ஒரு மாநிலத்திலே (டெக்ஸாஸ்) 254 கவுன்ட்டிகள், வாஷிங்டன் டி.சி.லே ஒரே ஒரு கவுன்ட்டிதான்.
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 3அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2
டெமாகிரடிக் பார்ட்டி, குடியரசுக் கட்சியைவிட (ரிபப்ளிகன் பார்ட்டி) நிறையச் செலவு செஞ்சிருக்காங்க.[iii] மொத்தம் $14 பில்லியன் (லட்சத்து நாற்பதாயிரம் கோடி டாலர் – ஒருகோடியே, எழுலட்சம் கோடி ரூபாய்) செலவு. உடனே இத்தனை பணமான்னு வாயைப் பிளக்காதீங்க, கூட்டிக் கழிச்சுப்பார்த்தார், அமெரிக்காவுலே ஓட்டுப்போட்ட ஒருத்தொருத்தருக்கும் சுமாரா $88.61தான் (ரூ.6378.20தான்!) செலவு பண்ணியிருக்காங்க. இந்தப்பணத்திலே நாலுபேரு உள்ள ஒரு குடும்பம் சுமாரான ஓட்டலுக்குப் போயிச் சாப்பிட்டா ஒருவேளை சாப்பிடலாம். அங்கே அம்மா உணவகம்மாதிரி இங்கே இருக்கற மக்டானல்ஸ்ல சாப்பிட்டா ரெண்டுவேளை — அவ்வளவுதான்!
View More அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்! – 2