தன் மண்ணையும் மக்களையும் ஆங்கிலேயரிடமிருந்து காக்க எதையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 33 மட்டுமே. சென்னம்மாவின் தொடர் எதிர்ப்பால், 1824-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கித்தூரைத் தாக்கினர். சென்னம்மாவின் சிறிய படையோ துணிச்சலுடன் போரிட்டது… நாட்டுப்புறக் கதைப்பாடல், லாவணி, கிகி படா வடிவங்களில் ராணி சென்னம்மாவின் வீரக் கதை காலம்காலமாகக் கூறப்பட்டுவருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 22-24-ம் தேதிகளில் கர்நாடக மாநிலம் கித்தூரில் நடைபெறும் ‘கித்தூர் உற்சவ’த்தில் சென்னம்மாவின் வீரம் கொண்டாடப்படுகிறது..
View More கித்தூர் ராணி சென்னம்மா: சுதந்திரப் போராட்ட வீராங்கனைTag: கன்னட மொழிப் படம்
காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வை
இந்த இயற்கைக்கு ஒரு மொழி உள்ளது. அது நம்மோடு பேசுகிறது என்பதை காடுபட்டி சிவனும், வனத்துறை அதிகாரி முரளியும் உணர்ந்துகொள்ளும் தருணம் நிலத்திற்கும் – அதிகாரத்திற்கும் வரும் இணக்கத்தை காட்டுகிறது.. ‘பஞ்சுருலி’ தன் மக்களுடைய தார்மீக சக்தி,அறத்தின் பெரு எழுச்சி. அது கண்களறியா நெருப்பு வேலியை போட்டு தன் மக்களை காக்கிறது.. இதை திரையில் சாத்தியப்படுத்திய விதத்தை பார்க்கும் போதுதான் அதில் இருக்கும் தெய்வத் தன்மையை உணர முடிகிறது. படத்தின் இறுதிக்காட்சிகளை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது…
View More காந்தாரா (கன்னடம்): திரைப்பார்வைஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்….. சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது….
View More ஸ்ரீ ராகவேந்திரர் என்னும் சன்னியாசி