கம்ப ராமாயணத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகவும் விரவிக் காணப் படுகின்றது. வேறெந்தப் புலவனுக்கும் கொடுக்கப் பெறாத பெருமை கம்பருக்கு வழங்கப் பெற்று வருகின்றது.”ஈழத்து வீழ்ச்சியை” பாடிய கம்பரை ஈழம் நிராகரிக்க வேண்டும் என்ற வகையிலான கருத்துக்களும் ஆங்காங்கே சிலரால் எழுப்பப்பட்டு வந்துள்ளன… அறமற்ற வகையில் உரிமையற்ற ஆட்சியாளனால் ஆளப்படும் நாடாக ஈழம் காட்டப்படுகிறது. எனினும் தன் இச்சைக்காகச் சமுதாயத்தைப் பலியிட்ட இராவணனிடமிருந்து ஈழத்தை “உம்பரில் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” என்று காட்டப்பெறும் விபீடணனுக்கு வழங்கியே காவியத்தைக் கம்பர் நிறைவு செய்கிறார்… “தவம் செய்த தவமால்” என்று உயர்த்திப் பேசுவதும் ஈழத்தின் உயர்வை உறுதியாகவும், சிறப்பாகவும் கம்பர் போற்றியுள்ளார் என்பதற்குத் தக்க சான்றுகளாகும்…
View More கம்பனும் இலங்கையும்Tag: கம்பநாட்டாழ்வார்
அச்சுதனின் அவதாரப் பெருமை – 3
இராமாவதாரம் என்பது, பிரபஞ்சம் முழுவதையும் படைத்துக் காத்தழிக்கும் முழுமுதற்பொருளின் சற்றும் குறையாத, சற்றும் வேறுபடாத உருவமே […] இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவனன்றோ! நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்த அயோத்தி ராம் ஜன்ம பூமி இயக்கத்தின் கோஷமே “மரியாதா புருஷோத்தம் ராம்” என்பதாயிற்றே! இராமாவதாரத்தின் உண்மையான வேதாந்தத் தத்துவ ரீதியில் அமைந்த தாத்பரியத்தை அறிய வேண்டுமானால் சான்றோர்களுடைய வாக்கை ஊன்றுகோலாக எடுக்க வேண்டும் […]
View More அச்சுதனின் அவதாரப் பெருமை – 3