எந்த ஒரு தேர்தலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு அனுதாப அலையும் வீசாத பட்சத்தில் ஆட்சி மாற்றமே பெரும்பாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த வழக்கமான நடைமுறை இம்முறை மாறுகிறது. இந்தத் தேர்தல்- செயலற்ற, சுயநல வடிவான, ஊழல் மலிந்த ஐ.மு.கூட்டணி அரசை வீட்டுக்கு அனுப்பும் ஒரு செயல்வீரரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வானது, நாடு முழுவதுமே ஒரு உந்துசக்தியைப் பாய்ச்சி இருக்கிறது…. “செப்டம்பர்-26 அன்று திருச்சி வருகை தரும் மோடியைப் பார்ப்பதற்காக இதுவரை இணையதளம் மூலமும், நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு இமெயில் மூலம் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும். அதனுடன் ரூ. 10 நுழைவுக் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்கலாம்”… இந்த 4 கட்சிகளும், இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் புது அத்தியாயம் எழுதப்படும் நிலை உருவாகும். இந்திய ஜனநாயகக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கமும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு துணையாக நிற்கும்…
View More தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2