கங்கையில் இறங்க எல்லோரும் காத்திருக்கிறார்கள். எப்போதும் பலர் குளித்துக்கொண்டிருக்கும் அந்தப் புனித நதி அந்தப் பொழுதில் யாருமில்லாமலிருக்கிறது. கங்கை மிகப் பெரும் ஓசையுடன் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அறுந்து தொங்கும் பாதுகாப்புச் சங்கிலிகள் தன் அசைவில், நதியின் வேகத்தைச் சொல்லுகின்றன. நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் பைனாகுலர்களுடனும், நதியில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் லைஃப் ஜாக்கெட்களுடனும் காவலர்கள். ஓயாது தினசரி பலரைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் அந்த நதிக்கு இது ஒரு நல்ல ஓய்வாகயிருக்குமோ என்று தோன்றுகிறது…
View More ஹரித்துவார்: கடவுளின் காலடியில்…