வால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்

இந்திய சுதந்திரத் திருநாள் அன்று ஆபிரகாமியத்தின் ஆக்கிரமிப்புப் பிடியில் இருந்து விடுபட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 60 சகோதர, சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்… வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா மதியம் அன்னதானத்துடன் நிறைவடைந்தது…

View More வால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்

ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரப் பெருமக்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல சமூக இயக்கங்களின் பங்களிப்பால் தான், அம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாதிக்க முடிந்துள்ளது.. இந்தப் போராட்டம், மதப் போராட்டமல்ல; மண்ணுக்கான போராட்டம். மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பதற்கான போராட்டம்…ஆரம்பம் முதற்கொண்டே பா.ஜ.க பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூட வெளிப்படையாக இப்போராட்டத்தை எதிர்க்கவில்லை…

View More ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

எந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட்டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான்.. கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது – இந்த நிலத்தில் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள்… மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்…

View More ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…

View More கோவை புத்தகக் கண்காட்சி 2010