வால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்

ஆகஸ்டு 15, வால்பாறை – கோயம்புத்தூர் மாவட்டம்: இந்திய சுதந்திரத் திருநாள் அன்று ஆபிரகாமியத்தின் ஆக்கிரமிப்புப் பிடியில் இருந்து விடுபட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 60 சகோதர, சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்.

valparai-homecoming-aug-2010-1

வில்லோனி பழங்குடியினர் குடியிருப்பு, கல்யாணப் பந்தல், அணலி எஸ்டேட், ஷேக்கல்முடி, சோலையார் அணைக்கட்டு, இஞ்சிப் பாறை, மானாம்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் முப்பது வருடங்கள் முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப் பட்டவர்கள்.

தாய்மதம் திரும்பும் விழாவை விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா மதியம் அன்னதானத்துடன் நிறைவடைந்தது.

valparai-homecoming-aug-2010-2

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரிஷி பல்பு (பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்), பி.கே.குமரன் (மாநில செயலர்) ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

நன்றி: ஹைந்தவ-கேரளம்

15 Replies to “வால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்”

  1. இனி இவர்கள் எந்த மதக் கடவுளையும் இகழப் போவதோ, பிற வழிபாட்டை வெறுக்கப் போவதோ இல்லை.

    இது வரை இந்த மக்கள பிற மதங்கல எல்லாம் பொய்யானவை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலே,பிற மதங்களை எல்லாம கண்டிக்கப் பட வேண்டும், ஒரு மதம் மட்டுமே உலகில் எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும் என்கிற கருத்தாக்கத்திற்கு உட்பட்டு இருந்ததால் பிற மத வழிபாடுகளை ஏளனம் செய்யவும் , பிற மதத்தினரை வெறுக்க்கவுமான பாதையில் சென்று கொண்டு இருந்தனர்.

    இப்போது இவர்கள வந்து உள்ள மதமானது, எந்த மதத்தையும் வெறுக்காத, எல்லா மதங்களின் கோட்பாடுகளிலும் உள்ள நல்லதை அணுகி பாரட்டும் வழிக்கு இவர்களை செலுத்துவதாகும்.

    இனிமேல் அவர்கள் இந்துக் கடவுள்களை வணங்கி அமைதியும் மகிழ்ச்சியும் அடைவதோடு, அவ்வப் போது மசூதிக்கோ, சர்ச்சுக்கோ, குருத்வாரோக்கோ சென்று வழிபடவும் தடை இல்லை .

    சர்வோ ஜனா ஜனா சுகினோ பவந்து என்னும் மன நிலைக்கு இவர்கள வந்து விட்டனர். இது மனித சமுதாயத்தின் அமைதிக்கு நல்லது. மனிதம் வாழட்டும்.

  2. Pingback: Indli.com
  3. நேபாளத்திலும் தான் மன்னர் ஆட்சி, பக்கத்தில் உள்ள பூட்டானிலும் தான் மன்னர் ஆட்சி. ஆனால் நேப்பாளத்தில் மட்டும் மன்னர், அவர் குடும்பத்தினர் மற்றும் அவர்களை சுற்றி இருப்பவர்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு? கடுப்பு?. ஏனென்றால் நேப்பாள மன்னர் ஒரு இந்து மன்னர். மத சம்பிரதாய படி அவர் கடவுளுக்கு இணை. ஆகையால் சாதாரண மக்களுக்கு அங்கு எந்த அதிகாரமும் கிடையாது. தங்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து என்னென்ன ஊழல், அநியாயங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் மன்னரும் அவனை சுற்றியுள்ள கும்பலும் செய்தார்கள். மக்களை பற்றி எந்தக்கவலையும் இல்லாததால் மன்னரின் அதிகாரத்துக்கு நெருக்கமாக மக்களும் உணரவில்லை. ஆகையால் கம்யுனிசம் அங்கு வளர்ந்தது.
    ஆனால் பூட்டானிலோ நிலைமை தலை கீழ். மன்னர் பௌத்த மன்னர். அங்கு மக்கள், மன்னர் ஆட்சியே போதும் என்கிறார்கள். ஜனநாயகம் வந்தால் பூட்டானும் இந்தியா போல் சீரழிந்து விடும் என்று அழுகிறார்கள்.

  4. இது பெரு வெள்ளமாக் மாற வேண்டும்.
    அரேபியாவுக்கு கிழக்கே உள்ளவர்கள் (பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட) எல்லோரும் அவர்களது முன்னோர் கலாச்சாரமான ஹிந்து தர்மத்துக்கு திரும்பி வர வேண்டும்.
    மீண்டும் இங்கெல்லாம் அமைதி நிலவ வேண்டும் .
    எல்லோரும் மேன்மையும்,பெரு வளமும் அடையட்டும்.
    விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்துக்குப் பாராட்டுக்கள் .

  5. வி ஹ் பி காரியகர்தாகளுக்கு,மனமார்ந்த பாராட்டுக்கள்
    உங்கள் பணி மேலும் சிறக்க பராசக்தி துணைபுரிவாள்

    ஜெய் பவானி,
    வந்தே மாதரம்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  6. நேபாள மன்னரைச் சற்றி இருந்தவர்கள் ஊழல் செய்ததால் மக்கள் எதிர்த்தனர்
    இது எந்த சுவிசேஷ பிரசங்கத்தில் சொல்லப் பட்டது?
    நடுவில் ஒரு செய்தி வந்தது
    அது என்னவென்றால் மன்னரின் பாதுகாப்பாளராக இருந்த ஒருவர் கூறியது-அதாவது ‘மன்னரையும் அவரது குடும்பத்தாரையும் கொன்றது மன்னரின் மகனே அல்ல.அவரைப் முகமூடி போட்டுக்கொண்டு வந்த ஒருவர் எல்லோரையும் கொன்று மன்னரது மகனையும் கொன்றார்’
    ஆனால் பொய்க் குற்றச் சாட்டு கூறி அவரிக் கைது செய்து சிறையில் அடைத்ததாக செய்தி வந்தது
    ஆக இதில் பெரிய சதி உள்ளது
    ரொம்ப காலமாக மிஷனரிகளுக்கு நேபாளத்தின் மீது ஒரு கண்.
    ஆகவே அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம்
    மன்னர் ஆட்சி வீழ்ந்ததும் மதம் மாற்றியதற்காக சிறையில் அடைக்கப் பட்ட மிஷனரிகள் விடுவிக்கப் பட்டனர், மற்றும் அரண்மனையில் உள்ள கோசாலையில் இருந்த எல்லாப் பசுக்களும் வெட்டப்பட்டன என்றும் செய்திகள் வந்தன.
    மேலும் எதோ இதற்காகவே காத்திருந்தது போல் பெரும் அளவில் கிறிஸ்தவ மத மாற்றம் ஆரம்பிக்கப் பட்டது.
    இதுவன்றி சீனாவுக்கும் தொடர்பு இருக்கலாம் .

  7. நல்ல முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  8. but you see.. they should return to their original caste.. what was their kula deivam 30 years before should be worshipped now..

    Hinduism has diverse culture.. and we have to find the culture of these people before they converted.. I am actually fighting with sangh people to NOT to collapse the kula deiva worship..

  9. அனைவரையும் வரவேற்கிறோம்! ஒன்று படுவோம் ! உயர்வடைவோம்!

  10. enadhu manamaarndha vaazhthukkaL. Hindu madham pottrudhalukkuriyadhu. Namadhu madhaththai paadhukaakka V.H.P. eduthu varum muyarchigaLukku en paraattudhalgaLai theriviththu koLgiren.

  11. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஹிந்து மதம் போற்றுதலுக்குரியது. நமது மதத்தை பாதுகாக்க வி.எச்.பி. எடுத்து வரும் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *