1967 முதல், சுவாமிகள் வேதாந்தத்தை முறையாக, ஆழமாக அதன் அனைத்துப் பரிமாணங்களுடனும் கற்பிக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கி, நல்லாசானாக அமர்ந்து கற்பிக்கத் தொடங்கினார். தனது நீண்ட வாழ்நாளில், சுவாமிஜி, இது போன்ற பத்து 3-வருடக் கல்விப் பயிற்சிகளில் நேரடியாக மாணவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். இதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்கு வேதாந்த ஞானத்தை அதன் தூயவடிவில் அளிக்கத் தகுதிவாய்ந்த நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை அவர் உருவாக்கிச் சென்றிருக்கிறார்… 2000ம் வருடம் AIM For Seva என்ற பெயரில் ஒரு சிறப்பான அகில இந்திய சமூக சேவை இயக்கத்தை சுவாமிஜி தொடங்கினார். இந்த இயக்கம் இந்தியாவின் பல மாநிலங்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது…
View More அஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதிTag: சாஸ்திர-பாஷ்ய நூல்கள்
சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்
சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்… வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில் வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர்…. ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம். சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார்….பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை….
View More சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1
பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் [..] மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை [..]
View More பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 1