அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டு பவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர். இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.
View More ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!Tag: சொத்துரிமை
கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2
“The Great Leap Forward” என்பதைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் இறந்து போனதாக, கம்யூனிஸ்டுகளால் நியமித்த குழுவே அரசுக்கு அறிவித்தது. இந்த அறிக்கை சில வருடங்களுக்கு முன் பொதுவில் கசிந்ததில், அந்த நிகழ்வில் பலரால் கவனிக்கப்படாத ஒரு கொடூரமும் நடந்தது தெரியவந்தது. நிலங்களை கட்டாயமாக அரசாங்கம் கையகப்படுத்தும் முனைப்பில் மாவோவின் அல்லக்கைகள் இருக்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நில சொந்தக்காரர்கள் 7 இலட்சம் பேர் வரை கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதே வெட்கம் கெட்ட சீன கம்யூனிஸ்ட் அரசு, 1979க்கு பின், சீனர்கள் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளவும்,தொழில்களை தொடங்கவும் அனுமதி அளித்தது. இன்று சீனா அடைந்துள்ள பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் இந்த ஒரே ஒரு விஷயமே முக்கியம் என்பது என் தீர்மானமான கருத்து. நாட்டிற்காக மட்டுமே உழைக்க வேண்டும் என்பதெல்லாம் மனித இயற்கைக்கு முரணானது. தனக்காகவும், தன் சந்ததிக்காகவும் உழைத்து, சேர்ப்பதில்தான் ஒரு மனிதனுக்கு ஊக்கம் ஏற்படும். அதனாலேயே, நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்பதே சரியான வழியே தவிர,பணக்காரர்களை கொன்று போடுவதால், நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. இன்றைய சீன முன்னேற்றத்தில்,பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளார்கள். அவர்களின் சாமர்த்தியமான வர்த்தகங்களினால்தான் சீன அரசிற்குவரி வருமானம் பெருகியுள்ளது. அதைக் கொண்டே, மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
View More கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2