சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…
View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்Tag: தனித்தமிழ்
தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்
தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்றீங்க, வருடப் பெயர் சுபக்ருது ப்லவ அப்படின்னெல்லாம் இருக்கு. இதெல்லாம் தமிழா?” – என்று ஏதோ யாருக்கும் தெரியாததைக் கண்டுபிடித்து விட்டது போல அற்பத்தனமான பதிவுகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கின்றன.. வடசொல் குறித்த நன்னூல் சூத்திரத்திற்கு உரை எழுதும் மயிலை நாதர் என்ன கூறுகிறார்?.. தை மாதப்பிறப்பு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதை விளக்கும் ஒரு நல்ல கட்டுரையைத் தர முடியுமா என்று நேற்று ஒரு நண்பர் கேட்டார். அடித்துத் துவைத்து நொறுக்கப்பட்ட பொய் வரலாறுகளும் திரிபுகளும் தமிழ்நாட்டில் சாவதே இல்லை என்று தோன்றுகிறது…
View More தமிழ்ப் புத்தாண்டும் சம்ஸ்கிருதமும் ஒப்பாரிகளும்சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்
இந்த முக்கியமான நூல் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1897-1971) எழுதிய சில நூல்கள் மட்டும் கட்டுரைகளின் நேர்த்தியான தொகுப்பாகும்… சம்ஸ்கிருதமே பாரத நாட்டின் பொதுமொழி; சைவம் என்பது பாரத நாடெங்கும் பரவியுள்ள வேதநெறியில் கிளைத்த சமயமே அன்றி “தமிழர் மதம்” அல்ல என்பதைத் தமிழிலக்கிய ஆதாரங்களிலிருந்தே நிறுவுகிறார்.. 1960ல் வெளிவந்த “நாடும் நவீனரும்” 125 தலைப்புகளின் கீழ் கேள்வி-பதில், விவாதம், கண்டனம், விமர்சனம் என்ற பாணியில் அமைந்துள்ளது. “நவீனர்” என்று ஆசிரியரால் குறிக்கப் படும் சைவர்களை எதிர்த்தரப்பாக்கி விஷயங்கள் அலசப்படுகின்றன…
View More சைவ சமயத்தில் மொழிப்போர்: புத்தக விமரிசனம்