வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை ‘வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு” என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்… வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின் வெற்றி என்று நிச்சயம் நினைத்துவிடக்கூடாது… தமிழகத்திலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் தத்தமது அஜெண்டாக்களுடன் களம் இறங்கியிருக்கின்றன. தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள் (அல்லது இந்தப் போராட்டங்கள் நடக்கத் தோதாக அவருடைய மரணம் நடத்தப்பட்டதா) பனி மலையில் சிறு நுனி மட்டுமே. இந்தப் போராட்டங்களை கொஞ்சம் எள்ளலுடன் எகத்தாளமாகப் பார்க்கும் போக்கே இருக்கிறது… இந்து மற்றும் இந்திய அம்சங்களை எதிர்க்க எந்தவொரு நியாயமான காரணமும் வசதி வாய்ப்பும் இல்லாத நிலையிலும் தனியாகப் பிரிந்தே தீரவேண்டும் என்ற கூக்குரல்களால் சூழப்பட்டுவரும் நமக்கு வடகிழக்கின் அந்தப் போராட்டத்தின் வீழ்ச்சி பற்றிய வரலாறு ஒரு நல்ல பாடம்…
View More டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்Tag: தமிழ் தேசிய கட்சி
ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்திய அரசும், மாநில அரசும் ஓஎன்ஜிசியும் மிகத் தைரியமாக மக்களிடம் சென்று விளக்க வேண்டும். இந்தத் திட்டத்தைப் பின்வாங்கினால் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மூலையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டமல்ல, கச்சா எண்ணெய்யைக்கூட எடுக்க முடியாது. ஏனெனில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் முடக்க ஒரு தரப்பு முனைப்பாகவே இருக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதன் வாயிலாக அமல்படுத்தாமல், முகநூல், தொலைக்காட்சிகள் மற்றும் மக்களிடம் நேரடியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நடைமுறைப்படுத்த வேண்டும்….
View More ஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்?