இவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.
இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்…