மதுரைக் கலம்பகம் — 1

ஐயன், மற்ற இடங்களில் தூக்கிய இடது திருவடியை வெள்ளியம்பலமாகிய மதுரையில் ஊன்றி கால்மாறி ஆடுகிறார். வீடுகள்தோறும் பிச்சைவாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது. காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார்.

பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சையெடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன்சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம்தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண்கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே

View More மதுரைக் கலம்பகம் — 1

அந்த ஆறு முகங்கள்

இந்த ஆறுமுகக் காதல் சாதாரண காதலா என்ன? நக்கீரர் ஆரம்பித்து அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள் என தொடர்ந்து பாடியிருக்கிறார்கள். அதில் இருக்கும் தொடர்ச்சி அற்புதமானது.. ஞான சூரியனாக இருள் அகற்றி தண்ணொளி திங்களாக அனுபவத்தை அளிக்கும் அருளாகவும் இருக்கிறது அவன் முகம்… போர்க் களத்தை விரும்பும் முகம். எவருடன் போர்? செறுநர் உடன். கொட்புற்றெழு நட்பற்ற அவுணரை வெட்டிப்பலியிட களத்தை விரும்பி செல்லும் முகம்.. கர்த்தரும் விண்ணவரும் அவன் பாதத்தை தங்கள் சிரங்களில் சூடுகின்றனர். அவனோ ஜீவாத்மாவான வள்ளியின் பதசேகரனாக இருக்கிறான். எப்படிப்பட்ட காதல் அவனுக்கு!.. பாரதத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மற்றொரு ஆன்மிக இணைப்பாக அது என்றென்றும் இருக்கும். இந்துக்களுக்கு ஆறுமுகனின் நட்சத்திரம் பரம்பொருளின் முடிவிலி பன்மைத்தன்மையை எடுத்துச் சொல்வது…

View More அந்த ஆறு முகங்கள்

சிவநெறி – சமய அவிரோதம்

அவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள். ஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை.
சமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.

View More சிவநெறி – சமய அவிரோதம்

திருவாரூர் நான்மணிமாலை — 2

இவ்வளவு பெருமைகள் உடைய வரானாலும் திருவாரூர் தியாகேசர் எளிவந்த தன்மையுடையவர். அவர் கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரைப் புனிதமாக ஏற்று அதில் திருமஞ்சனம் செய்தார். அவர் ருசிபார்த்துக் கொடுத்த ஊனை மிகச்சிறந்த நைவேத்தியமாக ஏற்றார். அவர் செருப்புக்காலால் மிதித்ததையும் செம்மாந்து ஏற்றுக் கொண்டார்.
இது மட்டுமா அர்ஜுனன் வில்லால் அடித்ததையும் பொறுத்துக் கொண்டார். மதுரையில் வைகைக்கரை உடைத்தபோது பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டபோது அதையும் உவந்து ஏற்றுக்கொண்டார்…

View More திருவாரூர் நான்மணிமாலை — 2

திருவாரூர் நான்மணிமாலை -1

திருவாரூருக்குள் நுழையுமுன் அங்குள்ள அகழியைத் கடக்கவேண்டுமே! அந்த அகழி கடல் போல் தோற்றமளிக்கிறது. மேகங்கள் அந்த அகழியைக் கடல் என்று நினைத்து அதில் படிகின்றன. சிவந்த கண்களையுடைய யானைகளும் அந்த அகழியில் படிகின்றன. வீரர்கள் யானைக்கும் மேகங்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இரண்டையுமே சங்கிலிகளால் பிணைக்கிறார்கள். தாங்கள் படிந்த அகழியில் யானைகள் இருப்பதை அறிந்த மேகங்கள் விரைவாக நீங்குகின்றன. இந்த அகழியில் காகங்கள் கூட்டமாகப் பறக்கின்றன. இந்தக் காட்சி உக்கிரகுமாரபாண்டியன் மேகங்களைச் சிறை பிடித்து வந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டு கிறது குமரகுருபரருக்கு.

View More திருவாரூர் நான்மணிமாலை -1

காசி[நன்னகர்]க் கலம்பகம்

முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன… குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன்பொருட்டு விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை (அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள்)…

View More காசி[நன்னகர்]க் கலம்பகம்

சிதம்பர தரிசனம்

தில்லையில் தங்கியிருந்த காலத்தில் குமரகுருபரர் “சிதம்பர மும்மணிக்கோவை” என்ற பிரபந்தத்தை இயற்றினார். புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் என்று மூன்று மணிகள் சேர்ந்த மாலையைப் போல மூன்று வகை செய்யுட்களால் ஆன இந்நூல் காட்டும் சிதம்பர தரிசத்தை இக்கட்டுரையில் காண்போம்…. உடுக்கை ஏந்திய தமருகக் கரம் உலகங்களை சிருஷ்டி செய்கிறது. அமைத்த பொற்கரம் அந்த உயிர்களுக்கு அபயம் தந்து சராசரங்களைக் காக்கிறது. அழலேந்திய கரம் அனைத்தையும் சங்காரம் செய்கிறது. ஊன்றிய பாதம் மறைக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் அனுக்கிரகம் செய்கிறது…. இவருக்கு ஆடுவதில் சலிப்பே ஏற்படாதா? அந்தத் திருவடிகள் தாம் சலித்துப் போகாதா? என்று கவலையும் ஆச்சரியமும் ஏற்படுகிறது புலவருக்கு. ஆனால் அவர் யாருக்காக ஆடுகிறார்? பதஞ்சலி முனிவருக்காக அல்லவா ஆடுகிறார்! அவரோ பதம் சலியாத முனிவர்! அவர் பெருமானையும் பதம் சலியாதவராக ஆக்கி விட்டாரோ?….

View More சிதம்பர தரிசனம்

அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்

குமரன் தன் பிஞ்சுக் கைகளால் சப்பாணி கொட்டுகிறான். இவன் சப்பாணி கொட்டக் கொட்ட என்ன நடக்கிறது? எட்டுக் குல மலைகளும் குலுங்கிப் பாதிப் பாதியாக விழுகிறது! மேரு மலையும் அதிர்வடைகிறது! தேவர்கள் நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. நாம் உய்ந்து போனோம் என்று சந்தோஷமடைகிறார்களாம்… “இப்படிக் கேட்டால் சொல்ல மாட்டேன் முறைப்படி நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் சொல்லுவேன்” என்கிறான் குமரன். மைந்தன் சொன்னபடியே. சீடனாகக் கீழே அமர்ந்து பணிவோடு உபதேசம் பெறுகிறான் தந்தை… “கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண் குறிப்பறிந்து அருகணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கு எனக் குறையிரந்து, அவள் தொண்டைவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்” என்று முருகன் வள்ளியிடம் காதல் கொண்டு சென்றதைக் கூறுகிறார் குமரகுருபரர்…

View More அளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்

சிவபிரான் சிதைத்த சிற்றில்

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்… வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்…

View More சிவபிரான் சிதைத்த சிற்றில்

கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை

முருகன் திரு அவதாரம். திரு விளையாடல்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கைகளின் சிறப்பு, சூர சம்ஹாரம், இருவர் திருமணம், தசாங்கம், வேண்டுகோள் எல்லாவற்றையும் 122 அடிகளில் இந்த செந்தமிழ்ப் பாமாலையில் சிறப்பாகப் பாடியுள்ளார் குமரகுருபரர்… கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து, மெய் ஆறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய முகத்தில் அணைத்து, உச்சி மோந்து, முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத்தளித்து… போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகமளிக்கும் முகமதியும் — தாகமுடன் வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம் பலவும் தந்தருளும் தெய்வ முகத்தாமரையும்… பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண் தோளும் அச்சமகற்றும் அயில் வேலும்…

View More கந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை