தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..
View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடுTag: திராவிட மாயை சுப்பு
மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை
இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ஜ் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.
இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.
View More மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை