மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்
View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?Tag: தி.மு.க
இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…
…தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்..
View More இதயம் இனித்தது; கண்கள் பனித்தன…