தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது – அஞ்சாமை, ஈகை, விவேகம், செயலூக்கம். திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்… யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு…

View More தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

சோ: சில நினைவுகள் – 3

அங்கு அறைக்குள் நண்பர்களுடன் ஜெபமணி அவர்களும் பிறரும் சோவுடன் கூடியிருந்தனர். சோ எந்தவித பதட்டமும் அச்சமும் இல்லாமல் நிதானமாக இருந்தார். சற்று முன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததன் அடையாளம் ஏதும் இல்லாமல் அமைதியாக இருந்தார். அவர் மீதான ஒரே கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் அது மட்டுமே. அந்த ஒரே ஒரு கொலை முயற்சி வன்முறைத் தாக்குதல் இந்தியாவின் வரலாற்றையே தீர்மானிப்பதில் முடிந்தது. அதற்கு ஒரு சாட்சியாக நான் அந்த இரவில் இருந்தேன்… ராஜீவ் காந்தி சோ மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவர் சோவிடம் பல விஷயங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். ராஜீவின் ஆதரவுடனான மைனாரிடி அரசை நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர் ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்த ஒரே காரணம் சோவும், சுப்ரமணியம் சுவாமியும் கொடுத்த அழுத்தம் மட்டுமே…

View More சோ: சில நினைவுகள் – 3

சோ: சில நினைவுகள் – 2

என் டி ஆருக்கு மெஜாரிடி இருந்தும் கூட இந்திரா அவரது அரசை கலைக்க ஏற்பாடு செய்தார். அதற்கெதிரான போராட்டத்தில் சோவின் பங்கு முக்கியமானது. ஜனநாயகத்திற்காக சோ என் டி ஆருக்கு அளித்த ஆதரவுகள் மூலமாக அவரது செல்வாக்கு வட இந்தியத் தலைவர்களிடம் வெகுவாக உயர்ந்தது… தமிழகமெங்கும் புலிகள் வீடுகள் வாடகைக்கு எடுத்துத் தங்கி துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்து வந்தனர்.சோ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். அவர்களுக்கு அளிக்கப் படும் சுதந்திரம் தமிழ் நாட்டை ஒரு வன்முறை பூமியாக மாற்றி விடும் என்று கதறி வந்தார். அவர் ஒருவர் மட்டுமே புலிகளைத் துணிவாக எதிர்த்து எழுதி வந்தவர்… மாநிலத்தில் எம் ஜி ஆரின் மறைவு, மத்தியில் ராஜீவின் தோல்வி, வி பி சிங்கின் ஆட்சி என்று இந்தியா மீண்டும் ஒரு பெரும் புயலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பமான சூழலில் அரசியல் தெளிவு துக்ளக் மூலமாகவே அளிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த சமயங்களில் சோ அவரது உச்சத்தில் செயல் பட்டு வந்தார்…

View More சோ: சில நினைவுகள் – 2

ஜெயிக்கப் பிறந்தவர்!

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது….

View More ஜெயிக்கப் பிறந்தவர்!

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது.…

View More வேரை அரிக்கும் கரையான்கள்

நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்

View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

ஊழலின் ஊற்றுக்கண் எது?

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலுக்கான பல உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அப்படிப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஊழலை சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். சூடான தோசைக் கல்லை அடுப்பில் இருக்கும்போது தொட்டுவிட்டு கை கொப்புளித்து, ஐயோ ஐயோ என்று அலறுபவனைப் போல ஊழல் பேர்வழிகள் எதிலாவது கைவித்து ஐயோ ஐயோ என்று அலறினால் அன்றி இவர்கள் திருந்த மாட்டார்கள்.

View More ஊழலின் ஊற்றுக்கண் எது?