கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்

சுவாமி விவேகானந்தர் உபநிஷதங்களின் சாரத்தை, வேதாந்தத்தின் மகத்துவத்தை மேலைநாடுகளில் முழங்கினார். இதைத் தாங்கொணாத மிஷனரிகள் “இந்தியாவில் இருக்கும் உண்மையான ஹிந்துமதம் பற்றி இவர் பேசவில்லை. மேலைநாட்டு தத்துவங்களைப் படித்துவிட்டு, அதையொட்டி, இவை ஏற்கனவே ஹிந்துமதத்தில் உள்ளன என்று நம்மை ஏமாற்றுகிறார்” என்று பிரசாரம் செய்தனர். பின்பு பால் ஹேக்கர் முதலானோர் தமது நூல்களில் இதனை வளர்த்தெடுத்தனர். சேவை, கர்மயோகம் போன்ற கருத்துக்கள் அனைத்தும் நமது சனாதன தர்மத்தின் அடிப்படையில் என்றும் இருப்பவை. ஆனால் இவற்றை நாம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து கடன் வாங்கினோம். அதனால் தான் பழைய ஹிந்து மதத்தை விட்டுவிட்டு, நியோ-ஹிந்துமதம் எனும் பொய் உருவானது என்பது பல மிஷனரிகளின் வாதம். இதுதான் நியோ-ஹிந்து எனும் கருத்து உருவான இடம்.. ஆனால் இப்போது, சில ஆசாரவாதிகள் காலத்துக்கு ஏற்ப சிந்தனை செய்யும் அனைத்து ஹிந்துத்துவவாதிகளையும் ‘நியோ’ என்று பட்டம் கொடுத்து ஏசுகிறார்கள். நம்மவர்களுக்கு இந்த விபரீதப்பொருள் தெரியுமா என்று எனக்குச் சந்தேகம்தான்… “பழமையை விடமுடியாமல், அதற்காக நிதர்சனத்தைத் தியாகம் செய்யும் அடிப்படைவாதிகள்” என்ற தோற்றம் ஹிந்து தர்மத்துக்குப் பொருந்தாத ஒன்று. அதனைப் பொருந்துமாறு செய்யும் வேலையை ஆசாரவாதிகள் பார்கின்றனர்…

View More கண்ணனின் கட்டளையற்ற கட்டளையும் நியோ-ஹிந்துத்துவமும்