ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்? ‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா? பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது…. பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால் ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.
View More பாரதி மரபும்,திரிபும் – 6