பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.
View More பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்