எளிய மக்களுக்கு மட்டுமல்ல மெத்தப் படித்தவர்களுக்கும் கூட இந்த இரண்டு கல்வி முறைகளில் தனியார் கல்வியே உயர்ந்தது என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது நல்ல வேலையைப் பெற்றுத் தரும் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது…. இந்தப் புத்தகத்தில் தமிழகத்தின் 9 முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் தமது கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவை ‘ஆழம்’ இதழில் தொடர் பேட்டியாக வெளியாகின. தாய் மொழி வழிக் கல்வி, அருகமைப் பள்ளி, மனனத்தை ஒரு துணை வழியாக மட்டுமே பயன்படுத்துதல், தேச – சமூக நலன் சார்ந்த கல்வி, மாணவர்களின் தனித் திறமைகள், விருப்பங்களுக்கு போதிய வாய்ப்பு என கல்வியின் அடிப்படைகளாக சிலவற்றை முன்வைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் இவர்கள் முன் வைக்கும் சிந்தனைகளுக்கு எதிர் திசையில் ராட்சச வேகத்துடன் நகர்ந்துவருகிறது… எண் சாண் உடம்புக்கு சிரசுதானே பிரதானம். தமிழகக் கல்வி நல்ல நிலையை அடையவேண்டுமென்றால், இந்தச் சொற்பச் சிறுபான்மையினர் தமிழ்க் கல்வியின் சிரசாக வேண்டும்…
View More தமிழகத்தில் மாற்றுக் கல்வி: புத்தக அறிமுகம்